Kathir News
Begin typing your search above and press return to search.

இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த தி.மு.க. பிரமுகர் உட்பட 8 பேர் கைது!

இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த தி.மு.க. பிரமுகர் உட்பட 8 பேர் கைது!

ThangaveluBy : Thangavelu

  |  22 March 2022 9:49 AM GMT

விருதுநகரில் இளம்பெண் ஒருவரை ஆபாச வீடியோ எடுத்து அதனை பயன்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக திமுக பிரமுகர் உட்பட 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹரன் 27, இவர் திமுக பிரமுகராக உள்ளார். ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 22 வயது இளம் பெண்ணை ஹரிஹரன் காதலிப்பதாக கூறி அவரை ஆபாசமாக வீடியோ எடுத்து தினமும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

அவர் மட்டுமின்றி கூட நண்பர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிலரையும் சேர்த்துக்கொண்டு பாலியல் அத்துமீறலில் ஹரிகரன் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். அதன்படி ஜூனத் அகமது 27, பிரவீன் 21 உள்ளிட்டோர் இளம் பெண்ணிடம் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் தன்னை காப்பாற்றுமாறு பாண்டிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இளம்பெண். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவர்கள் 4 பேர் மற்றும் ஹரிகரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News