Kathir News
Begin typing your search above and press return to search.

வாக்காளர்களுக்கு வடை சட்டி வழங்கும் அமைச்சருக்கு வந்தனம் - தி.மு.க அமைச்சரை விமர்சித்து போஸ்டரில் சம்பவம் செய்த பா.ஜ.க

வாக்காளர்களுக்கு வடை சட்டி வழங்கும் அமைச்சருக்கு வந்தனம் - தி.மு.க அமைச்சரை விமர்சித்து போஸ்டரில் சம்பவம் செய்த பா.ஜ.க
X

ThangaveluBy : Thangavelu

  |  13 Jun 2022 11:01 AM IST

அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது அமைச்சவையில் இடம் பிடித்திருப்பவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன். இவர் வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்து வரும் நிலையில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருளாக வடை சட்டிகள், (வாணலிகள்) வழங்கப்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வாக்குறுதிகளை நிறைவேற்றாத வருவாய்த்துறை அமைச்சர் வாக்காளர்களுக்கு வடைசட்டி வழங்கி வந்தனம் செய்து வருகிறார் என்று பா.ஜ.க. சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பேசும் பொருளாக அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது தி.மு.க. சார்பில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். இவர் தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக உள்ளார். தற்போது வாக்களார்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பரிசுப்பொருட்களாக வாணலிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாளையம்பட்டி பகுதி முழுவதும் அமைச்சரின் வருகை பற்றிய போஸ்டர்கள் வைரலாகி வருகிறது. அதில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வக்கில்லாத வருவாய்த்துறை அமைச்சர் வடை சட்டி வழங்கி வாக்காளர்களுக்கு வந்தனம் செய்து வருகிறார். எனவே அன்னாரின் வருகையை பா.ஜ.க. வாழ்த்தி வரவேற்கிறது என கூறப்பட்டுள்ளது. இந்து போஸ்டர்கள் விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் பா.ஜ.க.வினர் ஒட்டியுள்ள சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Source, Image Courtesy: One India Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News