Kathir News
Begin typing your search above and press return to search.

தேர்தல் செலவுக்கு வாங்கிய கடனை செலுத்த முடியவில்லை - தி.மு.க. பெண் கவுன்சிலர் தற்கொலை முயற்சி!

தேர்தல் செலவுக்கு வாங்கிய கடனை செலுத்த முடியவில்லை - தி.மு.க. பெண் கவுன்சிலர் தற்கொலை முயற்சி!

ThangaveluBy : Thangavelu

  |  7 May 2022 6:34 AM GMT

விருதுநகரில் தி.மு.க. பெண் கவுன்சிலர் ஒருவர் தேர்தல் செலவுக்கு கடன் வாங்கியதால், அதனை திருப்பி கட்ட முடியாமல் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் ஐந்தாவது வார்டு நகர்மன்ற உறுப்பினராக இருப்பவர் ஆஷா, 33. இவர் சமீபத்தில் நடைபெற்ற நகராட்சி தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது தேர்தல் செலவுக்காக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தேர்தல் செலவுக்கு கடன் கொடுத்தவர்கள் பொது இடத்தில் வைத்து தன்னை ஆபாசமாகப் பேசியதாக மேனகா, மாரீஸ்வரி, கலைச்செல்வி உள்ளிட்ட மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆஷா சில தினங்களுக்கு முன்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி புகாரின் அடிப்படையில் விருதுநகர் மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், தி.மு.க. கவுன்சிலர் ஆஷா இன்று தன்னுடைய வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கவனித்த அவரது உறவினர்கள் உடனடியாக ஆஷாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆஷா தற்கொலைக்கு முயற்சிக்கு முன்பாக, ஒரு ஆடியோ வெளியிட்டார். அதில், நான் ஆஷா பேசுகிற«ன். அக்கா.. அண்ணே.. நான் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள், தன்னை வேண்டும் என்றே சண்டை போடற அளவுக்கு நடந்துக்கிறாங்க என்று உடைந்த குரலில் பேசியுள்ளார்.

ஆனால், ஒரு தரப்பினர் கூறும்போது, உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் விருதுநகரில் 36 வார்டுகளிலும் கோடிக்கணக்கில் பணம் புரண்டது. அப்போது ஓட்டுக்கு 2 ஆயிரம் வரை கொடுக்கப்பட்டது. அதே போன்று ஆஷா வார்டான 5வது வார்டிலும் பணம் புரண்டது. அவை எல்லாம் கடன் வாங்கி செலவழித்துள்ளனர் என்றனர். தேர்தலில் தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் கடன் வாங்கி செலவு செய்துவிட்டு அதனை திருப்பி கொடுக்காமல் தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News