விருதுநகரில் தலித் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: முக்கிய அரசியல் புள்ளிகள் தொடர்பா?
By : Thangavelu
விருதுநகரில் தலித் இளம்பெண் ஒருவரை காதலிப்பதாக கூறி திமுக பிரமுகர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் சம்பவத்தை போன்று விருதுநகர் சம்பவமும் இருப்பதால் உரிய விசாரணை நடைபெற வேண்டும் என பாஜக உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்துள்ளது. இதனால் டிஜிபி சைலேந்திர பாபு தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு அதிகப்பட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதற்காக தென்மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க், மதுரை சரக டி.ஜ.ஜி. பொன்னி மற்றும் விருதுநகர் மாவட்ட எஸ்.பி. மனோகர், டி.எஸ்.பி அர்ச்சனா உள்ளிட்ட அதிகாரிகள் குழு பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் விபரங்களை சேகரித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய திமுக இளைஞரணி வார்டு அமைப்பாளர் ஜூனத் அகமது, ஹரிகரன், மாடசாமி, பிரவீண் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி சிறுவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதா? அல்லது மற்றவர்களுக்கு பகிரப்பட்டதா? உள்ளிட்ட கோணங்களிலும் விசாரணை நடைபெறுகிறது. இதில் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்கின்ற சந்தேகத்தையும் போலீசாருக்கு எழுப்பியுள்ளது. இது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அதே சமயத்தில் கைது செய்யப்பட்டவர்கள் இதே போன்று வேறு எந்த பெண்ணையும் மிரட்டி பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமா? அல்லது அரசியல் புள்ளிகள் ஈடுபட்டிருக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஏற்கனவே முக்கிய பிரமுகர்கள் பலருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டது. தற்போது விருதுநகர் சம்பவத்திலும் முக்கியமான அரசியல் புள்ளிகளுக்கும்தொடர்பு இருக்கலாம் என்கின்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Source: Maalaimalar
Image Courtesy: Twiter