அ.தி.மு.க.வில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே இல்லை.. எடப்பாடி பழனிசாமியை வம்பிழுக்கும் சசிகலா.!
கட்சிக்கு நான்தான் தலைமை தாங்குகிறேன் என்றெல்லாம் பேசி அதனை பதிவு செய்து தொலைக்காட்சிகளுக்கு அனுப்பி வருகிறார்.
By : Thangavelu
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து சென்னை திரும்பிய சசிகலா, சில மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டு தற்போது மீண்டும் அரசியலில் இறங்குகிறேன் என்று தொலைபேசி உரையாடலை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார்.
அதன்படி தினமும் யாராவது ஒருவருக்கு போன் போட்டு நான் சசிகலா பேசிகிறேன். விரைவில் கட்சியை கைப்பற்றுவேன். கட்சிக்கு நான்தான் தலைமை தாங்குகிறேன் என்றெல்லாம் பேசி அதனை பதிவு செய்து தொலைக்காட்சிகளுக்கு அனுப்பி வருகிறார்.
இந்நிலையில், தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை சீண்டும் வகையில் ஆடியோ ஒன்றை சசிகலா வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில், அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே இல்லை. இவர்களாகவே போட்டுக் கொண்டனர் என கூறுகிறார்.
அது மட்டுமின்றி கட்சியின் தலைமையை தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க முடியும். வருகின்ற நாட்களில் தொண்டர்களின் ஆதரவில் கட்சிக்கு தலைமை ஏற்பேன் என்று கூறியுள்ளார். இந்த ஆடியோ வெளியிட்டுள்ள நிலையில், இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.