வலிமையான மற்றும் வளமான தமிழகம் உருவாக பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கவும்: அண்ணாமலை!
By : Thangavelu
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வளமான மற்றும் வலிமையான தமிழகத்தை எப்போது பார்க்க போகின்றோம் என்று ஏங்கும் தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப தமிழக பாஜக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி அமைந்த பின்னர் தமிழகத்திற்கு ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
மேலும், ஏழை, எளிய பெண்களுக்கு வங்கி கணக்கு மற்றும் 8.36 லட்சம் பேருக்கு வீடு, 76 லட்சம் பேருக்கு முத்ரா வங்கி கடன், விவசாயிகள் அனைவருக்கும் வருடத்துக்கு 6 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தால் தமிழகத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
மேலும், தமிழகத்திற்கு 9 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றியுள்ளது. ஆனால் தமிழகத்தில் அரசு பொய் வாக்குறுதிகளை அளித்தே மக்களை ஏமாற்றி வருகிறது. இதனை மாற்றுவதற்கு அனைவரும் வாக்களிப்பது மக்களின் கடமை ஆகும். தவறாமல் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Daily Thanthi