Kathir News
Begin typing your search above and press return to search.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு.!

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் உள்ள 88 ஆயிரத்து 937 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  7 April 2021 12:08 PM IST

தமிழகம் முழுவதும் நேற்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. பதிவான வாக்குப்பெட்டி இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறுகிறது. இதனால் வாக்குப்பெட்டி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.





தமிழகம் முழுவதும் 75 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் உள்ள 88 ஆயிரத்து 937 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடியில் பதிவான வாக்கு இயந்திரங்களுக்கு, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

இதனிடையே போலீசார் பலத்த பாதுகாப்புடன் வாகனங்களில் எடுத்து சென்று, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்றனர். வாக்கு எண்ணும் மையங்களை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News