திண்டுக்கல் மாவட்டத்திற்கு 2 லாரிகளில் வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்.!
voting machine visit dindigul

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல் 6ம் தேதி) நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்டங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2 லாரிகள் மூலமாக கொண்டு வரப்பட்டுள்ளது.
நிலக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் இறக்கி வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சரிசெய்யப்பட்டு, பின்னர் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கும் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் அரசியல் கட்சிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அதனை தேர்தல் ஆணையம் போக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதே போன்று மற்ற மாவட்டங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.