தி.மு.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு பிடிவாரண்ட்!

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.,வும் தற்போது திமுகவில் இணைந்தவருமான எஸ்.காமராஜ் மீது ரூ.10 லட்சம் செக் மோசடி செய்த வழக்கில் பிடிவாரண்டு பிறப்பித்து கரூர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட மீண்டும் சீட் அளிக்காததால் கிருஷ்ணராயபுரம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், கரூர் மாவட்ட ஜெ பேரவை செயலாளருமான காமராஜ் திமுவில் இணைத்துக்கொண்டார்.
இந்நிலையில், கரூர் ஆண்டான்கோயில் அம்பாள் நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரிடம் கடந்த 2020ல் அவசர செலவிற்காக ரூ.10 லட்சத்தை காமராஜ் பெற்றுள்ளார். அதற்கு வட்டி செலுத்தாமலும், கடன் தொகையை திருப்பி செலுத்தாமலும் இழுத்தடித்து வந்துள்ளார் முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜ். இதனால் ராமச்சந்திரன் செக் மோடி வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜிக்கு பிடிவாரண்டு பிறப்பித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
Source, Image Courtesy: News 18 Tamilnadu