Kathir News
Begin typing your search above and press return to search.

தொண்டர்களை எச்சரித்த ஸ்டாலின் - தோல்வி பயம் தொற்றி கொண்டதா?

தொண்டர்களை எச்சரித்த ஸ்டாலின் - தோல்வி பயம் தொற்றி கொண்டதா?

தொண்டர்களை எச்சரித்த ஸ்டாலின் - தோல்வி பயம் தொற்றி கொண்டதா?
X

Mohan RajBy : Mohan Raj

  |  21 Dec 2020 6:45 AM GMT

வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அனைத்து கட்சிகளின் ஆட்டமும் முழு வீச்சில் இருக்கும் என்பதை தற்பொழுது உணர்ந்துள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்றைய மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் தனது கட்சியினரை எச்சரித்துள்ளார்.

வழக்கம் போல் ஆளும் அரசுகள் மீது பழிபோட்டு அதனால் ஏற்படும் வெறுப்பு வாக்குகளை பெற்று எளிதில் வென்றுவிடலாம் என நினைத்த ஸ்டாலினின் மனக்கணக்குகள் பொய்யாகிவிடும் என்ற பயம் இன்றைய ஸ்டாலின் பேச்சில் தெரிகிறது.

இன்றை மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் கூறியதாவது, "தமிழகத்தில் அடுத்து அமையுள்ள ஆட்சி திமுக ஆட்சிதான் என்பதை கூறிக்கொள்கிறேன். நம்மால்தான் தமிழகத்தை வெல்ல முடியும். நம்மால்தான் தமிழகத்தை ஆள முடியும். உங்களுடைய சக்தியை முழுமையாக பயன்படுத்தினால்தான் முழுமையான வெற்றி பெறமுடியும். நாம்தான் வெல்லப் போகிறோம். ஆனால், அந்த வெற்றியை எளிதாக பெறவிட மாட்டார்கள்" என பயத்தில் தனது கட்சியினரை எச்சரித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், "ஒவ்வொரு தொகுதியிலும் உதயசூரியன்தான் வேட்பாளர், கருணாநிதிதான் வேட்பாளர் என மனதில் வைத்து கொள்ளுங்கள். தனிநபர்கள் வெற்றிபெற வேண்டும் என நினைக்காதீர்கள் திமுக வெற்றி பெற வேண்டும் என நினைக்கவேண்டும்.

இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் 5 முறை வெற்றி பெற்றதற்கு சமம். நாம் ஜெயித்துவிடக்கூடாது என்பதற்காக சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கிறார்கள். நமக்கு எதிராக மும்முனை தாக்குதல் நடத்துகிறார்கள்" என தன் மனதில் உள்ள பயத்தை முதன் முறையாக கட்சினர் மத்தியில் வெளிக்காட்டியுள்ளார்.

மக்களிடையே ஒரு பயத்தை தூண்டி அதனால் ஏற்படும் மனக்கலக்கத்தை தனக்கு சாதகமாக்கி விடலாம் என்ற ஸ்டாலினின் எண்ணம் தவறானது, மேலும் தனது கட்சியினர் தேர்தலில் வரும் எதிர்ப்புகளை எதிர்க்க தயக்கம் காட்டி வருவதை உணர்ந்த அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News