Kathir News
Begin typing your search above and press return to search.

அப்போ முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை பார்க்க சென்றது நன்றி தெரிவிக்க இல்லையா? - வெளியான புதிய தகவல்

ஸ்டாலின் வெளிநாடு பயணத்திற்காக அனுமதி கேட்க தான் பிரதமரை சந்தித்தார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அப்போ முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை பார்க்க சென்றது நன்றி தெரிவிக்க இல்லையா? - வெளியான புதிய தகவல்
X

Mohan RajBy : Mohan Raj

  |  21 Aug 2022 8:09 AM IST

ஸ்டாலின் வெளிநாடு பயணத்திற்காக அனுமதி கேட்க தான் பிரதமரை சந்தித்தார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் புது தில்லி சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து விட்டு உடனே சென்னை திரும்பினார். ஸ்டாலின் பிரதமரை சந்தித்த தினத்தன்று டெல்லியில் இருந்து வெளியாகும் நாளிதழ்களில் பிரதமர் மோடியின் பக்கத்தில் ஸ்டாலின் மோடி ஒன்றாக இருக்கும் படத்தை போட்டு செஸ் ஒலிம்பிக் போட்டி துவக்கி வைத்ததற்கு பிரதமருக்கு நன்றி என விளம்பரம் செய்யப்பட்டது.

இது டெல்லி அரசியல் பார்வையாளருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியவுடன் மட்டுமல்லாமல் எதுக்கு இந்த விளம்பரம் என அவர்கள் கேள்வி எழுப்பினார்கள், இது குறித்து டெல்லி அரசியல் வட்டாரங்கள் பேசப்படுவது இதுதான் 'மத்திய அரசிடம் ஸ்டாலின் சரண்டர் ஆகி விட்டார்' என கூறி வருகின்றனர்.

தன் குடும்பத்திற்கும் தமிழக அமைச்சர்களுக்கும் பிரச்சனை வந்து விடுமோ என பயந்து ஸ்டாலினும் மம்தா மாடலை பின்பற்ற ஆரம்பித்து விட்டார் என கூறப்படுகிறது. இந்த சூழலில் ஸ்டாலின் பிரதமரை சந்தித்தபோது தான் வெளிநாடு செல்ல இருப்பதாக மோடி இடம் தெரிவித்தாராம்.

இதற்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் மத்திய அரசு உடனே வழங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News