டாஸ்மாக் வாசல்ல ஓட்டு கேட்க போகிறோம்! தி.மு.க மா.செவின் அறிவார்ந்த ஐடியா!
டாஸ்மாக் வாசல்ல ஓட்டு கேட்க போகிறோம்! தி.மு.க மா.செவின் அறிவார்ந்த ஐடியா!
By : Mohan Raj
"வரும் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுபான கடைக்கு சென்று அங்கு வருபவர்களிடம் ஓட்டுக் கேட்கப் போகிறோம்" என தி.மு.க மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் தெற்கு மாவட்ட செயலாளருமான கே. கே. எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசியதாவது, "அ.தி.மு.க மதுபானக் கடைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்துவருகிறது. கடைகளை மூடுகிறோம் என கூறிவந்த நிலையில், 100% மதுபான கடைகளை திறந்து விட்டது. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பதற்கு பதிலாக ஒவ்வொரு மதுபான கடையில் வாசல் முன்பு அமர்ந்து அங்கு வரும் குடிமகன்கள் இடம் ஓட்டு கேட்கப் போகிறோம்.
ஏனென்றால் அங்குதான் தமிழகத்திலுள்ள அனைத்து ஆண்களும் மது அருந்த வருகிறார்கள். அதனால் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பதைவிட மதுபான கடை முன்பு ஓட்டு கேட்கலாம், வேலை இலகுவாக முடிந்துவிடும்" என பேசினார். தி.மு.க'வில் இருக்கும் முக்கிய தலைவர்கள் 4 சாரய ஆலைகளை நடத்தி வரும் வேளையில் அதுபற்றி ஏதுவுமே தெரியாத அளவிற்கு தி.மு.க மாவட்ட செயலாளர் பேசியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.