Kathir News
Begin typing your search above and press return to search.

கூலித் தொழிலாளிகளின் நிதியில்தான் நாம் தமிழர் கட்சி நடக்கிறது: சீமான் மீது பாயும் ராஜீவ்காந்தி.!

கூலித் தொழிலாளிகளின் நிதியில்தான் நாம் தமிழர் கட்சி நடக்கிறது: சீமான் மீது பாயும் ராஜீவ்காந்தி.!

கூலித் தொழிலாளிகளின் நிதியில்தான் நாம் தமிழர் கட்சி நடக்கிறது: சீமான் மீது பாயும் ராஜீவ்காந்தி.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Feb 2021 9:09 PM IST

நாம் தமிழர் கட்சியில் இருந்தவர் ராஜீவ்காந்தி. இவர் கட்சி தொடங்குகின்ற காலத்தில் இருந்து சீமான் உடன் பயணித்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக அவர் அக்கட்சியை விட்டு வெளியேறிவிட்டார். தற்போது மற்றொரு கட்சியில் இணைந்த ராஜீவ்காந்தி சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். சீமான் மற்ற மொழி பேசுபவர்களையும் தமிழ் பேசுபவர்களையும் ஒப்பிட்டு வருகின்றார்.

வந்தேறிக் கூட்டம் என பேசுவது எனக்கு பிடிக்கவில்லை. அதே போன்று மற்றவர்களும் ஒவ்வொருத்தராக கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர் என கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்ப்பட்டதே கூலித்தொழிலாளிகளின் உழைப்பில்தான் என பேசினார். அதாவது ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து அரபு நாடுகளுக்கு கூலி வேலைகளுக்கு சென்ற இளைஞர்களின் பணத்தில்தான் கட்சி இயங்கி வருகிறது என்று குற்றம்சாட்டினார். அவர் ஏமாற்றுகிறார் எனவும் முன்வைத்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News