தி.மு.க. அரசு நேர்மை தவறினால் சி.பி.ஐ. விசாரணை: சி.டி.ரவி பரபரப்பு தகவல்!
தமிழக பாஜக அலுவலகமான கமலாலயம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு அழுத்தம் கொடுப்போம் என்று பாஜக பொதுச் செயலாளர் சி.டி.ரவி கூறியுள்ளார்.
By : Thangavelu
தமிழக பாஜக அலுவலகமான கமலாலயம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு அழுத்தம் கொடுப்போம் என்று பாஜக பொதுச் செயலாளர் சி.டி.ரவி கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டுகளை மர்ம நபர்கள் வீசினர். அதில் ரவுடி கருக்கா வினோத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணையில் நம்பிக்கையில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழக பாஜக அலுவலகம் மீதான தாக்குதல் பற்றி பாஜக பொதுச்செயலாளர் சி.டி.ரவி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழக பாஜக அலுவலகம் மீது நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. இதனால் சிலர் எங்களை பயமுறுத்த முயற்சி செய்கிறார்கள். அதற்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். மேலும், திமுக அரசு நியாயமான விசாரணை நடத்த்த உத்தரவிட வேண்டும். தவறும் பட்சத்தில் சிபிஐ மற்றும் என்.ஐ.ஏ., விசாரணைக்கு அழுத்தம் கொடுப்போம். இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.
Source, Image Courtesy: Maalaimalar