Kathir News
Begin typing your search above and press return to search.

மேற்கு வங்காளம்.. நட்டா காவலர்கள் மீதான தாக்குதல்.. டிஜிபி, தலைமை செயலாளருக்கு MHA அழைப்பு.!

மேற்கு வங்காளம்.. நட்டா காவலர்கள் மீதான தாக்குதல்.. டிஜிபி, தலைமை செயலாளருக்கு MHA அழைப்பு.!

மேற்கு வங்காளம்.. நட்டா காவலர்கள் மீதான தாக்குதல்.. டிஜிபி, தலைமை செயலாளருக்கு MHA அழைப்பு.!

Saffron MomBy : Saffron Mom

  |  11 Dec 2020 3:23 PM GMT

வெள்ளிக்கிழமை மேற்கு வங்காள மாநிலத்தில் சட்ட ஒழுங்கு குறித்த விசாரணைக்கு மாநிலத்தின் DGP, தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளரை மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பானது நேற்று மேற்கு வங்கத்தில் பா.ஜ.க தலைவர்களின் காவலர்கள் மற்றும் வாகனங்கள் மீது திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அனுப்பப்பட்டுள்ளது.

டிசம்பர் 14 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்தைச் சந்திக்கத் தலைமைச் செயலாளர் மற்றும் தலைமைக் காவலர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை அன்று மேற்கு வங்காள வருகையின் போது நட்டா காவலர்கள் மீது கல் வீச்சு தாக்குதல் ஏற்பட்டது.

மேலும் பா.ஜ.க தேசிய செயலாளர் கைலாஷ் விஜயவர்கியாவின் காரும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மன் அனுப்பியது குறித்துப் பேசிய TMC MP ஸுகதா ராய், "இது அதிகாரப்பூர்வ விஷயம். அவர்கள் சம்பவங்கள் குறித்து விசாரிக்க எப்போது வேண்டுமானாலும் அதிகாரிகளைச் சந்திக்கலாம்.

அதனால் இது குறித்து கூற ஒன்றுமில்லை," என்று தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையை வரவேற்ற பா.ஜ.க தேசிய செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா, "மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் ஆட்சியில் சட்ட ஒழுங்குகள் முற்றிலுமாக மோசமடைந்து வருகின்றது," என்று கூறினார். இவ்வாறு அரசியல் ரீதியாக அதிகாரிகள் மையத்தால் வரவழைக்கப்படுவது முதல் முறையை என்ற கேள்விக்கு, "இது போன்று கட்சித் தலைவர்கள் தாக்கப்படவில்லை என்பதும் உண்மைதான்," என்று கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News