மேற்குவங்கத்தில் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.!
சமூக இடைவெளி மற்றும் கட்டாயம் அனைவரும் முககவசம் அணிந்து கொண்டுதான் வாக்குச்சாவடிக்குள் வரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதன்படி 7 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்தது. கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரமாக வீசத் தொடங்கியுள்ளதால், வாக்குப்பதிவின்போது, பல்வேறு வகையிலான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
சமூக இடைவெளி மற்றும் கட்டாயம் அனைவரும் முககவசம் அணிந்து கொண்டுதான் வாக்குச்சாவடிக்குள் வரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் 8ம் கட்ட தேர்தலும், கடைசிக்கட்டமாக இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 11 ஆயிரத்து 860 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடைசிக் கட்டத் தேர்தலில் வாக்களிக்க 84 லட்சத்து 77 ஆயிரத்து 728 வாக்காளர்கள் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் 11 தொகுதிகள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 35 தொகுதிகளில் களம் காணும் 283 வேட்பாளர்களில் களத்தில் உள்ளனர். தேர்தல் ஆணைய விதிமுறைபடி, கிரிமினல் வழக்குகளை பின்னணியாக உடையவர்கள் போட்டியிடும் தொகுதிகள் ரெட் அலார்ட் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.