Begin typing your search above and press return to search.
மேற்கு வங்காளம்: திரிணாமூல், பாஜக இடையே முன்னிலையில் கடுமையான போட்டி.!
தற்போது வாக்கு எண்ணிக்கையில், ஆளும் கட்சியாக இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ்- பாஜக இடையே முன்னிலையில் கடும்போட்டி நிலவி வருகிறது.

By : Thangavelu
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டது.
தற்போது வாக்கு எண்ணிக்கையில், ஆளும் கட்சியாக இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ், பாஜக இடையே முன்னிலையில் கடும்போட்டி நிலவி வருகிறது. இதில் திரிணாமூல் காங்கிரஸ், பாஜகவுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளிலும், பாஜக 38 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
மொத்தமுள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் ஆட்சி அமைக்க 148 இடங்களில் வெற்றி பெற்றால் போதுமானது ஆகும்.
Next Story
