ஆட்சியில் இருக்கும்போது எது செய்யாதவர்.. தேர்தலுக்காக மனு வாங்குகிறார்.. ஸ்டாலின் மீது அமைச்சர் வேலுமணி தாக்கு.!
ஆட்சியில் இருக்கும்போது எது செய்யாதவர்.. தேர்தலுக்காக மனு வாங்குகிறார்.. ஸ்டாலின் மீது அமைச்சர் வேலுமணி தாக்கு.!
By : Kathir Webdesk
தமிழக துணை முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் எதுவும் செய்யாமல் தற்போது தேர்தலுக்காக மனு வாங்கிக் கொண்டிருக்கிறார் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி இன்று புலியகுளம் பகுதியில் நடைபெற்றது. இந்த விழா கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ரூ.72.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதன் பின்னர் அவர் பேசும்போது, முதலமைச்சர் உத்தரவின் பேரில் 2 சென்ட் நிலத்திற்கான பட்டா 561 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.69 கோடியே 62 லட்சம் ஆகும்.
மேலும் தமிழகத்தின் துணை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தார். அப்போது எல்லாம் பொதுமக்களிடம் மனு வாங்காமல் தற்போது மீண்டும் தேர்தல் வருகிறது என்பதால் மனு வாங்கி வருகிறார். அவர் அனைத்தும் தேர்தலுக்காக நாடகம் நடத்துகிறார். அதே போன்று ஒவ்வொரு வீட்டிற்கு ரூ.6 ஆயிரம் கொடுப்பேன் என்று கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது ஸ்டாலின் வாக்குறுதி அளித்து ஓட்டு வாங்கி சென்றார். தற்போது யாருக்காவது ரூ.6 ஆயிரம் கொடுத்தாரா என கேள்வி எழுப்பினார்.