காட்டுமிராண்டித்தனமான ஜல்லிக்கட்டுக்கு எதற்கு வரணும்.. கோ பேக் ராகுல்.. ட்விட்டரில் டிரெண்டிங்.!
காட்டுமிராண்டித்தனமான ஜல்லிக்கட்டுக்கு எதற்கு வரணும்.. கோ பேக் ராகுல்.. ட்விட்டரில் டிரெண்டிங்.!
By : Kathir Webdesk
ஜல்லிக்கட்டு விளையாட்டை பார்ப்பதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி நாளை (ஜன.,14ம் தேதி) தமிழகம் வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் கோ பேக் ராகுல் என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது.
இலங்கை தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சியை தமிழர்கள் ஒரு போதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். அது போன்று வீரமிக்க தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு ராகுல்காந்தி வருவது அவமானமாக கருதுகின்றனர். தமிழரின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நாளை முதல் தமிழகம் மட்டுமின்றி, உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த தமிழரும் கொண்டாடும் பண்டிகை ஆகும்.
இதற்காக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதே போன்று மதுரையில் நடைபெறும் போட்டியை காண உலகம் முழுவதிலிருந்தும் பல ஆயிரம் பேர் வருவார்கள். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டினர் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிகிறது. இந்நிலையில், மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனை பார்வையிட காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி வரவுள்ளார்.
ஆனால், ராகுலின் வருகைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்தது காங்கிரஸ் கட்சி தான் என நெட்டிசன்கள் அதற்கு ஆதாரமான வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ட்விட்டரில் கோ பேக் ராகுல் என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் ஜல்லிக்கட்டு போட்டியை காட்டுமிராண்டித்தனமான நிகழ்ச்சி எனவும் கூறியிருந்தார். இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது ராகுல் காந்தி எந்த முகத்தை வைத்துக்கொண்டு தமிழகம் வருகிறார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழர்களின் பாரம்பரியத்தை அழித்துவிட்டு அவர் வருவது அனைத்து தமிழர்களுக்கும் ஒரு கருப்பு நாள் என்றும் சொல்லலாம்.