Kathir News
Begin typing your search above and press return to search.

ஐகோர்ட் கண்டனம் தெரிவித்த பிறகும் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதன் மர்மம் என்ன? அண்ணாமலை கேள்வி!

ஹைகோர்ட் கண்டணம் தெரிவித்த பிறகும் செந்தில் பாலாஜியை அமைச்சராகவே வைத்திருப்பதன் மர்மம் என்ன? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

ஐகோர்ட் கண்டனம் தெரிவித்த பிறகும் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதன் மர்மம் என்ன? அண்ணாமலை கேள்வி!

KarthigaBy : Karthiga

  |  6 Sep 2023 5:45 PM GMT

தமிழக பா.ஜ.க தலைவர் கே. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-


சட்டவிரோத பண பரிமாற்றம் செய்த வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது அனைவரும் அறிந்ததே . பொதுமக்களிடம் பண மோசடி செய்த ஒருவரை அமைச்சராக தொடரச் செய்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு ஏன் வந்தது? என்பது புரியவில்லை. பொதுமக்கள் உட்பட அனைவரும் கேள்வி எழுப்பியும் முதலமைச்சர் அதற்கு பதிலளிக்காமலேயே இருந்து வந்தார்.


இந்த நிலையில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வது எதிர்த்து ஹைகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் நேற்று ஹைகோர்ட் அமர்வு தீர்ப்பளித்துள்ளது .இத்தனை நாட்களாக பொதுமக்களும் தமிழக பா.ஜ.க.வில் உள்ள கட்சிகளும் எழுப்பிய கேள்விகளை முதலமைச்சர் நோக்கி கோர்ட்டும் வைத்துள்ளது. சிறையில் இருப்பவர் எப்படி அமைச்சர் பதவிக்கான பணிகளை மேற்கொள்ள முடியும்? எந்த பணிகளும் ஒதுக்கப்படவில்லை என்றால் எதற்காக அவரை அமைச்சராக வைத்திருக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியதோடு ஊழல் குற்றச்சாட்டு இருப்பவர்களை அமைச்சர் பதவிகளில் நியமிக்க கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலையும் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.


மேலும் அமைச்சருக்கான பணிகளை ஒருவருக்கு ஒதுக்க முடியவில்லை என்றால் அவரை இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருப்பது அரசியலமைப்பு சட்ட அடிப்படையில் இல்லாத தார்மீக நெறிமுறைகளுக்கும் நல்லாட்சிக்கும் எதிரானது என்று ஐகோர்ட்டு கண்டித்துள்ளது . செந்தில் பாலாஜி மீது ஊழல் புகார்களை அடுக்கிய தி.மு.க.வை அவரை காப்பாற்ற எந்த எல்லைக்கும் சென்றது தான் விந்தையிலும் விந்தை. சோதனைக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய அன்றே அமைச்சர் பதவிக்கான தார்மீக உரிமையை அவர் இழந்து விட்டார்.


ஒரே கேள்வி ஐகோர்ட்டு கூறிய பிறகும் செந்தில் பாலாஜியை அமைச்சராகவே வைத்திருக்க வேண்டும் என்று முதலமைச்சர் விரும்புவதில் உள்ள மர்மம் என்ன? என்பதுதான். அவரது அமைச்சரவையில் உள்ள மற்ற அமைச்சர்களுக்கு இதுபோன்ற பிரச்சனை வந்தால் முதலமைச்சர் இதே போல அவர்களையும் காப்பாற்ற முயற்சிப்பாரா என்பது கேள்விக்குறியே. இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News