இலவச திட்டங்களால் நாட்டிற்கு ஏற்படும் அபாயம் என்ன? மத்திய அரசு விவாதம்!
இலவச திட்டங்களால் நாடு பேரழிவை சந்திக்கும்.மத்திய அரசு விவாதம்
By : Karthiga
அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசத் திட்டங்களால் நாடு பொருளாதார பேரழிவை சந்திக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.
இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யக்கோரி உபாத்யாயா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் விகாஸ் சிங் இலவச திட்டங்களை அறிவிக்கும் போது அதற்கான நிதி தேவைப்படுகிறது. நாடு எதிர்கொண்டுள்ள 60,000 கோடி ரூபாய் கடனையும் கருத்தில் கொள்ளவேண்டும். இலவச திட்டங்களுக்கு நிதி எங்கிருந்து கிடைக்கும் 'யாருடையபையில் எடுக்கப்படுகிறது என்பதையும் பார்க்கவேண்டும்' என வாதிட்டார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் 'விகாஸ் சிங்' இலவச திட்டங்களுக்கான நிதி ஆதாரத்தை தெரிவிக்கும் வகையிலான மாதிரி தேர்தல் அறிக்கையை வெளியிட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம் என வாதிட்டார் .
இதற்கு தலைமை நீதிபதி அது வெறும் சம்பிரதாய நடவடிக்கையாகவே அமையும் தேர்தல் நடத்தை விதிகள் தேர்தலுக்கு முன்னர் தான் அமலுக்கு வரும் இலவச திட்ட அறிவிப்பு விவகாரம் தீவிரமானது இதில் ஒன்றும் செய்ய முடியாது. மத்திய அரசு தேர்தல் ஆணையமும் கூறமுடியாது என குறிப்பிட்டார்.
மூத்த வக்கீல் கபில்சிபல் 'இலவச திட்ட அறிவிப்பு விவகாரத்தை நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டும்' என தெரிவித்தார்.
அப்போது தலைமை நீதிபதி இலவச திட்ட அறிவிப்பு விவகாரத்தை நாடாளமன்றம் விவாதிக்கும் என எதிர்பார்க்கிறீர்களா? எந்த அரசியல் கட்சி விவாதிக்க முன் வரும் .இலவச திட்ட அறிவிப்பு எந்த ஒரு கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்காது அனைத்து கட்சிகளும் இலவச அறிவிப்புகளை வெளியிடுவது விரும்புகின்றன அனைவரது கருத்தையும் கேட்காமல் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க போவதில்லை என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு நிதி ஆயோக் மத்திய நிதி ஆணையம் சட்ட ஆணையம் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய நிபுணர் குழுவை ஏற்படுத்துவது குறித்த யோசனைகளை தெரிவிக்க மனுதாரர் மத்திய அரசு தேர்தல் ஆணையத்துக்கும், மூத்த வக்கீல் கபில்சிபலுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 11-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர் .
