சசிகலா விடுதலை - அ.தி.மு.கவின் நிலை ? சசிகலாவின் தாக்கம் எவ்வாறு இருக்கும் ?
சசிகலா விடுதலை - அ.தி.மு.கவின் நிலை ? சசிகலாவின் தாக்கம் எவ்வாறு இருக்கும் ?
By : Kathir Webdesk
கடந்த சில நாட்களாக ஊடகங்கள் சசிகலாவின் விடுதலையை பற்றியே அதிகம் பேசுகின்றன. அதிலும் குறிப்பாக, சசிகலா விடுதலையால் அதிமுக ஆட்டம் கண்டு விடும் என்றும், அதிமுகவின் பெரிய கைகள் எல்லாம் சசிகலாவின் பின்னால் சென்று விடுவார்கள் என்றும் ஆருடம் கூறுகிறார்கள்.
அதன் உச்சமாக ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடியோடு சசிகலா போனதை ஊடகங்கள் பரபரப்பாக பேசுகின்றன. TTV தினகரனும் Wait & See என்று பேட்டி கொடுத்தார்.
இவர்கள் சுற்றி வளைத்துக் கூறுவது எல்லாமே ஒன்று தான். சசிகலாவிடம் தான் அதிமுகவின் குடுமி உள்ளது; தினகரனை கண்டுக்கொள்ளாத அதிமுகவினர், சசிகலா வந்தவுடன் ஒரே அடியாக தாவுவார்கள் என்று தான் நிறுவ முயல்கிறார்கள் !!!
ஆனால் என்னை பொறுத்தவரை அதிமுகவில் ஒரு புல் பூண்டு கூட அசையாது என்று தான் கருதுகிறேன். காரணம் மிக எளிது. தேர்தலுக்கு முன்னர் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுத்தும் சக்தி சசிகலாவிடம் நிச்சயம் இல்லை !!!
எப்போது அவர் சிறை சென்றாரோ, எப்போது 4 ஆண்டுகளுக்கு அவரால் வெளி வர முடியாது என்ற நிலை உருவானதோ, எப்போது ஆட்சியை கலைக்கும் நோக்கதோடு சட்டமன்றம் சென்ற ஸ்டாலின் கிழிந்த சட்டையோடு வெளி வந்தாரோ, அப்போதே கொஞ்சம் கொஞ்சமாக அதிமுக சசிகலாவின் பிடியில் இருந்து விலகி செல்ல ஆரம்பித்தது.
ஸ்டாலினால் ஆட்சி கலைக்க முடியாமல் போனதற்கும் சசிகலாவின் தோல்விக்கும் என்ன சம்மந்தம் ?
அதிமுக என்பது தலைவர்களை விட தொண்டர்களால் பலம் பெற்ற கட்சி. அந்த தொண்டர்களை ஒன்றிணைக்கும் சக்தி என்பது திமுக எதிர்ப்பு தான். அதை யார் சிறப்பாக செய்கிறார்களோ, அவர்களே அதிமுகவின் தன்னிகர் அற்ற தலைவராக உருவானார்கள். ஜெ vs ஜா என்ற போட்டியில் ஜெ வென்ற பின்னர் ஒட்டு மொத்த அதிமுக தொண்டர்களும் ஜெ பின்னால் நின்றது அவரது திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டால் தான்.
ஒரு வேளை ஸ்டாலின் தனது சட்டையை கிழியாமல் பார்த்துக் கொண்டு ஆட்சியை கலைத்து இருந்தால், எடப்பாடியால் அதிமுகவை ஒன்றிணைக்க முடியாது என்ற எண்ணம் தொண்டர்கள் மத்தியில் தோன்றி இருக்கும். அப்போது சசிகலா சிறை சென்று இருந்தாலும், கட்சியை வழி நடத்த அவர் கை காட்டிய TTV மீது கவனம் சென்று இருக்கும்.
ஆனால் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியுற்று இன்னும் 6 மாதத்திற்கு ஆட்சிக்கு எந்த பிரச்னையும் இல்லை என்ற நிலை வந்த உடன் எடப்பாடி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள துவங்கி விட்டார்.
தன்னை அடக்கி ஆளும் / தங்களை மிக சரியாக கட்டுபடுத்த தெரிந்த ஒருவருக்கு முழுமையாக கட்டுபட தயாராக இருக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி அவர்களிடம் கட்டுப்பட்டு இருப்பது ஒன்றும் கடினம் அல்ல ..
சொல்லப்போனால் ஜெயலலிதாவிடம் இருந்ததை விட கொஞ்சம் பயம் இல்லாத கட்டுப்பாட்டோடு இப்போதைய நிர்வாகிகள் இருப்பதில் அவர்களுக்கு கொஞ்சம் சந்தோசமே....
இதனால் தான் மீண்டும் அழுத்தி சொல்கிறேன், தேர்தலுக்கு முன்னர் அதிமுகவில் பெரிய ஷிஃப்ட் எல்லாம் இருக்காது என்று.
தினகரனை எடப்பாடி ஓரம் கட்டிய போது சிலர் தினகரன் உடன் சென்றனர்... அவர் RK nagar தேர்தலில் வென்றவுடன் ஒட்டுமொத்தமாக அதிமுக நகரும் என எதிர்பார்க்கப்பட்ட போது கூட யாரும் அசையவில்லை....
4 ஆண்டுகள் ஆட்சி இருக்கிறது... அதை காப்பாற்றுவது தான் முக்கியம் என ஜெ மறைவின் போது வைக்கப்பட்ட அதே கோஷம் தான் ops பிளவு, தினகரன் பிளவு, 18 MLA பிரிவு என அனைத்து கட்டங்களிலும் அதிமுகவை ஒன்றாக வைக்க பயன்பட்டது…
தேர்தல் வரையிலும் அது அப்படியே தான் இருக்கும். இதற்கு இன்னொரு முக்கிய காரணம், நிர்வாகிகள் பலரும் ஆட்சியில் / அதிகாரத்தில் இருப்பவர்களை சார்ந்து இருக்கிறார்கள்... அதனால் அவர்களின் நிலையை பொறுத்து தான் இவர்களும் முடிவு எடுப்பார்கள்.
சரி, எடப்படியை தவிர்த்து ஆட்சியில் இருக்கும் மற்றவர்களின் நிலை என்னவாக இருக்கலாம் ???
என்னை பொறுத்தவரை சசிகலாவிடம் அவர்களும் உடனடியாக ஜம்ப் அடிக்க மாட்டார்கள்....
Practical Reson எதுவாக இருக்கும் என்று பார்த்தால் anti incumbency தான் முதலில் வந்து நிற்கும்....
10 வருட எதிர்பலையை ஜெயலலிதா அவர்கள் கூட சமாளித்து இருக்க முடியுமா என்பது சொல்ல முடியாது...
அதனால் ஏற்கனவே சாமானிய மக்களுக்கு பரிச்சயம் இல்லாத.... ஒரு நெகடிவ் இமேஜோடு இருக்கும் சசிகலா தலைமையில் தேர்தலை சந்திக்க அதிமுகவின் இப்போதைய பெரும் தலைகள் யாரும் விரும்பமாட்டார்கள்...
நாம் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை வைத்து இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை !!!
நமக்குன்னு நம்ப தொகுதியில் ஒரு செல்வாக்கு இருக்கு.... இரட்டை இலை சின்னமும் கொஞ்சம் செலவும் செய்தால் அடிச்சி புடிச்சி கொஞ்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்து அடுத்த 5 வருஷத்துக்கு ஒரு சாதாரண MLA வாகவே இருந்துவிடலாம் ... பிறகு அப்பறம் பார்த்துக் கொள்வோம் என்ற கணக்கு தான் பெரும்பாலானோருக்கு இருக்கும்...
தேவை இல்லாமல் சசிகலாவின் நெகடிவ் இமேஜை சுமக்க வேண்டாம்... எடப்பாடி எடுக்கும் முடிவில் நாமும் நிற்போம்... இப்போதைக்கு சீட்டு வாங்குவது தான் முக்கியம் என கணக்கு போடுவார்கள்....
எடப்படியின் கணக்கும் இதன் upgraded version ஆக தான் இருக்க வாய்ப்புள்ளது.... சசிகலாவின் எதிர்ப்பு ஓட்டை காரணம் காட்டி... தேர்தல் வரை அமைதியாக இருங்கள்.... உங்கள் பெயரை சொல்லாமல் நாங்கள் நிறைய ஜெய்போம் என எடப்பாடி சொல்லலாம்... அதற்கு நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியை உதாரணமாக காட்டலாம்… எடப்பாடியை மக்கள் ஏற்றுக்கொள்ள துவங்கி விட்டார்கள் என்ற அரசியல் செய்தி தான் அது.
சசிகலாவால் தேர்தலில் போட்டியிட முடியாது என்றாலும், ரஜினி சொன்னதைப் போல கட்சிக்கு ஒருவர் ஆட்சிக்கு ஒருவர் என கட்சிக்கு நான், ஆட்சிக்கு தினகரன் அல்லது எடப்பாடி என சமாதானம் செய்து ... இப்போதைக்கு கட்சியை கைப்பற்ற வேண்டும் என்பது சசிகலா மற்றும் அவரை சார்ந்தோரின் எண்ணமாக இருக்கலாம்….
ஆக மொத்தத்தில்.... 2021 தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் நிகழலாம்... ஆனால் அதற்கு முன்னர் நிகழும் வாய்ப்பு மிக குறைவு.... அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிலையில் இருந்து இருந்தால் தேர்தலுக்கு முன்னர் அதிரடிகள் பயங்கரமாக இருந்தது இருக்கலாம்... ஆனால் எதிர்ப்பு அலையில் தேர்தலை சந்திப்பதாலும், எடப்பாடி என்பவர் ஜெயலலிதா போல established leader இல்லை என்பதாலும் , தங்களை மட்டும் காப்பாற்றிக் கொள்வதில் தான் அதிமுகவின் நிர்வாகிகளும், அதிகாரத்தில் இருப்பவர்களும் குறியாக இருப்பார்கள் என நான் கருதுகிறேன்…
பார்ப்போம்…
- விக்னேஷ் செல்வராஜ்.