ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய என்ன அவசரம்! அரசியல் உள்நோக்கமா என தி.மு.க. அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!
பணமோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்த நிலையில், கர்நாடகா மாநிலம், மாண்டியாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
By : Thangavelu
பணமோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்த நிலையில், கர்நாடகா மாநிலம், மாண்டியாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே ராஜேந்திர பாலாஜி கைதான நிலையில் அவரது முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (ஜனவரி 6) நடைபெற்றது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், முன்ஜாமீன் மனுவை இன்று விசாரிக்க இருந்தோம். அதற்குள் அவரை கைது செய்வதற்கான அவசரம் ஏன் என்ற கேள்வியை திமுக அரசுக்கு நீதிபதிகள் எழுப்பினர். இது அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் பாபுராய், பலராமன், முத்துப்பாண்டியன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜிக்கும் விரைவில் ஜாமீன் கிடைக்கும் என அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
Source, Image Courtesy: Daily Thanthi