Begin typing your search above and press return to search.
இப்ப இவர் நடந்து என்ன ஆகப்போகுது? ஒன்னும் பிரயோஜமில்லை - ராகுலை விமர்சித்த சீமான்
ராகுல் காந்தியின் நடை பயணத்தால் நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

By : Mohan Raj
ராகுல் காந்தியின் நடை பயணத்தால் நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை சின்ன போரூரில் உள்ள நம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வீரமங்கை வேலுநாச்சியாரின் 226 வது நினைவு மற்றும் கீழ்வெண்மணி உயிர்நீத்தவர்களின் 54 ம் ஆண்டு நினைவுதினம் முன்னிட்டு அவர்களின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் சீமான்.
அப்போது அவர் ராகுல் காந்தி பயணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்து பேசியதாவது, 'ராகு காந்தி நடை பயணம் செய்வது என்ன பிரயோஜனம்? எதுவும் பிரயோஜனமில்லை இதனால் நாட்டுக்கு எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை' என தெரிவித்தார்.
Next Story
