Kathir News
Begin typing your search above and press return to search.

'சனாதனத்தை பற்றி பேசுவதில் ஆளுநர் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது?' - அண்ணாமலை

'தமிழகம் மண்ணின் சனாதனத்தை பற்றி பேசுவதில் ஆளுநர் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது?' என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

சனாதனத்தை பற்றி பேசுவதில் ஆளுநர் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது? - அண்ணாமலை
X

Mohan RajBy : Mohan Raj

  |  14 July 2022 7:27 AM IST

'தமிழகம் மண்ணின் சனாதனத்தை பற்றி பேசுவதில் ஆளுநர் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது?' என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது, அப்போது அண்ணாமலை கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது பேசிய அவர், 'தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு அமைச்சர்கள் பொதுமக்கள் மத்தியில் நடந்து கொண்டதை நீங்களே பாருங்கள், கடலூர் தி.மு.க எம்.பி முந்திரி தோட்டத்தில் ஒருவர் மர்மமாக உயிரிழந்தார், தி.மு.க ராஜ கண்ணப்பன் அரசு ஊழியரை ஜாதி பெயரை சொல்லி திட்டுகிறார், சமீபத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பெண்ணிடம் நடந்து கொண்ட விதத்தை நீங்களே பாருங்கள் இது தான் தி.மு.க அமைச்சர்களின் லட்சணம்' என்றார்.

மேலும் பேசியவர், 'மதுரையில் காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்று வரும் நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்துள்ளார் இது நியாயமற்றது. மேலும், தமிழக மண்ணின் சனாதனத்தை பற்றி ஆளுநர் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது? ஆளுநர் ரப்பர் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும் என தி.மு.க'வினர் நினைக்கிறார்களா? என கேள்வி எழுப்பினார்.


Source - News 7 Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News