'ஆக' என ஸ்டாலின் பேச்சை துவங்கியதும் எழுந்து சென்ற தி.மு.க'வினர்
'ஆக' என ஸ்டாலின் பேச்சை துவங்கியதும் எழுந்து சென்ற தி.மு.க'வினர்
By : Mohan Raj
தி.மு.க தலைவர் ஸ்டாலினின் பேச்சை கேட்காமல் தி.மு.க'வினரே எழுந்து சென்ற விவகாரம் திருவண்ணாமலையில் பரபரப்பாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தி.மு.க கட்சி சார்பில் நிர்வாகிகள் கூட்டம் கணொளி காட்சி வழியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஸ்டாலின் பேசுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்திற்காக ஆரணி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அப்பகுதியை சேர்ந்த தி.மு.க'வினர் வரவழைக்கப்பட்டிருந்தனர். சற்று நிரம்பவே அந்த மண்டபத்தில் கூட்டம் வந்திருந்தது. ஆனால் கூட்டம் தொடங்கி சற்று நேரத்தில் ஸ்டாலின் பேசத்துவங்கியதும் கூட்டம் சரசர வென கலைய துவங்கியது. என்ன செய்வதென்று நிர்வாகிகள் கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தனர்.
தி.மு.க தலைவரின் பேச்சை கேட்க தி.மு.க'வினருக்கே விருப்பமில்லாமல் எழுந்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் சிதம்பரம் பகுதியில் இதே போல் உதயநிதி காலி நாற்காலிகளை பார்த்து பேசினார் என்பது குறிப்பிடதக்கது.
Source - NEWS J
Images - NEWS J