ஜி.எஸ்.டி கூட்டம் மதுரையில் எப்ப நடத்துவீங்க? - நிர்மலா சீதாராமனிடம் பி.டி.ஆர் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா?
அடுத்த ஜி.எஸ்.டி கூட்டம் மதுரையில் நடக்கவிருக்கிறது.

By : Mohan Raj
அடுத்த ஜி.எஸ்.டி கூட்டம் மதுரையில் நடக்கவிருக்கிறது.
கடந்த முறை ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் சண்டிகரில் நடந்தது, அடுத்த கூட்டம் செப்டம்பரில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கூட்டத்தை தமிழகத்தில் நடத்த வேண்டும் என தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் கோரிக்கை விடுத்திருந்தார்.
சமீபத்தில் அவர் ஜி.எஸ்.டி கவுன்சில் தலைவராக இருக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் மூன்று பக்க கடிதம் எழுதி இருந்தார். அதில் அவர் அடுத்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தை மதுரையில் நடத்த வேண்டும் மதுரை என் தொகுதி மட்டுமல்ல தமிழ் கலாச்சாரத்தை பறைசாற்றும் நகரம் எனவும் தெரிவித்திருந்தார்.
கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து மாநில அமைச்சர்களையும் மதுரையில் உள்ள மீனாட்சி கோவில், சரித்திரங்கள் வாய்ந்த இடம் மற்றும் அருகில் உள்ள அனைத்து இடங்களுக்கும் நானே அழைத்துச் செல்கிறேன். கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் அனைத்து அமைச்சர்களும் தமிழக முதல்வர் விருந்து அளிப்பார் என எழுதி உள்ளாராம் தியாகராஜன்.
இதை அடுத்து தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் மத்திய நிதி அமைச்சருக்கு அடிக்கடி போன் செய்து ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கு தேதி கொடுத்து விட்டீர்களா? என கேட்டுக்கொண்டே இருக்கிறாரா இந்த கூட்டத்தை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் நடக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் கேட்டுக்கொண்டுள்ளாராம்.
