Kathir News
Begin typing your search above and press return to search.

'எங்கே போனஸ்?' தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ'க்களை நிறுத்தி கதறவிட்ட தூய்மை பணியாளர்கள்

பொங்கல் போனஸ் எங்கே என கேட்டு தி.மு.க எம்.பி மற்றும் அமைச்சரை தூய்மை பணியாளர்கள் கதற விட்டுள்ளனர்.

எங்கே போனஸ்? தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏக்களை நிறுத்தி கதறவிட்ட தூய்மை பணியாளர்கள்

Mohan RajBy : Mohan Raj

  |  16 Jan 2023 1:33 AM GMT

பொங்கல் போனஸ் எங்கே என கேட்டு தி.மு.க எம்.பி மற்றும் அமைச்சரை தூய்மை பணியாளர்கள் கதற விட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் 80'ற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிந்து புரிந்து வருகின்றனர். தற்பொழுது பொங்கல் பண்டிகை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்கள் ராசிபுரம் நகராட்சி ஆணையர் அசோகுமாரிடம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அசோக்குமார் கட்சி நிர்வாகிகளிடம் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கே போனஸ் என கூறியதாகவும் தற்பொழுது தூய்மை பணியாளருக்கு போனஸ் இல்லை எனவும் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தூய்மை பணியாளருக்கு போனஸ் வழங்காத நகராட்சி ஆணையரை கண்டித்து அனைத்து கட்சியை சேர்ந்த நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் தட்டு ஏந்தி யாசகம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் தூய்மை பணியாளர்கள் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரையில் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என உறுதியாக தெரிவித்துள்ள்ளனர். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் தி.மு.க மாநிலங்களுக்கு உறுப்பினரும், தி.மு.க நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜேஷ் குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாகவும் விரைவில் பொங்கல் குறித்த முடிவை வழங்குவதாகவும் ராஜேஷ்குமார் உத்தரவு கொடுத்ததற்கு பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதுவரை களத்தில் இறங்கி போராடி வந்த மக்கள் தற்பொழுது திமுக எம்.பி, எம்.எல்.ஏ'க்களை நிறுத்தி எங்கே எங்களது தேவைகள் என கேட்க வைக்கும் அளவிற்கு போராட்டங்கள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News