தி.மு.க பதாகை படங்கள் பற்றிய அறிவிப்பு - யாரை ஓரம்கட்ட? உதயநிதியா? கனிமொழியா?
தி.மு.க பதாகை படங்கள் பற்றிய அறிவிப்பு - யாரை ஓரம்கட்ட? உதயநிதியா? கனிமொழியா?
By : Mohan Raj
தி.மு.க'வில் முன்பெல்லாம் அண்ணா'வின் படம், ஈ.வே.ராமசாமி படம், கருணாநிதி படம் ஆகியவை மட்டுமே அதிகளவில் இடம்பெறும். ஏன் ஸ்டாலினின் படங்கள் கூட அதிக அளவில் இடம்பெறாது.
அதிலும் குறிப்பாக சென்னை சுற்றிய பகுதிகளில் மட்டுமே ஸ்டாலின் படங்கள் இடம்பெறும் தென்தமிழகமான மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் மு.க.அழகிரி படங்களே அதிக அளவில் இடம்பெறும்.
ஆனால் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு நிலைமை தலைகீழ் ஸ்டாலின் தி.மு.க தலைவரானார். பின் ஸ்டாலின் மற்றும் உதயநிதி படங்களே அதிக இடம்பிடித்தன. ஏன் கட்சியின் மகளிர் அணி பதாகை'கள் கூட சில இடங்களில் உதயநிதி படம் இடம்பெற்று கனிமொழி படம் கூட இடம்பெறாமல் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் தி.மு.க'வில் இருந்து ஓர் அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதில் இனி தி.மு.க பதாகைகளில் ஈ.வே.ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி மற்றும் எனது புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுபற்றி சில அரசியல் விமர்சகர்களிடம் பேசிய போது இரண்டுவிதமான காரணங்கள் கிடைத்தன.
ஒன்று சமீப சில மாதங்களாக உதயநிதியை மகிழ்விக்க தி.மு.க விளம்பரங்கள் மற்றும் பதாகைகள் மூலம் உதயநிதி'யின் படங்கள் மட்டுமே ஏன் சில இடங்களில் கருணாநிதியின் படங்கள் கூட இடம்பெறாமல் உடன்பிறப்புகள் வரம்பு மீறியதால் கட்சியின் மூத்த உடன்பிறப்புகள் ரொம்பவே மனமுடைந்துள்ளதால் அதனை தடுக்கவே இந்த அறிவிப்பு என்கின்றனர்.
மற்றொரு காரணம், கனிமொழியை ஓரம்கட்டும் வேளைகள் முழுவீச்சில் நடைபெறுவதால் இத்தகைய
அறிவிப்பு எனவும் தெரிவிக்கின்றனர்.
தேர்தலை இன்னும் ஐந்து மாதங்களில் வைத்துக்கொண்டு இப்படி உட்கட்சி பூசலை ஊரறிய நடத்தினால் கட்சி என்னாவது என சீனியர் உடன்பிறப்புகள் புலம்பி வருகின்றனர்.