Kathir News
Begin typing your search above and press return to search.

சிறையில் உள்ள சசிகலாவுக்கு டிடி எடுத்தவர்கள் யார் யார்?

சிறையில் உள்ள சசிகலாவுக்கு டிடி எடுத்தவர்கள் யார் யார்?

சிறையில் உள்ள சசிகலாவுக்கு டிடி எடுத்தவர்கள் யார் யார்?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Nov 2020 6:40 PM GMT

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் 3 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டார். தற்போது அவர் நன்னடத்தை காரணம் காட்டி இன்னும் ஓராண்டு இருக்கும் முன்னரே விடுதலை செய்ய கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்கிடையே, பெங்களூருவை சேர்ந்த டி.நரசிம்மமூர்த்தி என்பவர், சசிகலா விடுதலை குறித்து கேள்வி எழுப்பி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். அவரது கேள்விக்கு கடிதம் மூலம் பதிலளித்த பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை சூப்பிரண்டு ஆர்.லதா, “சிறை ஆவணங்கள்படி உச்ச நீதிமன்றம் விதித்துள்ள அபராதத் தொகையை செலுத்தினால், சசிகலா அனேகமாக அடுத்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 27-ம் தேதி விடுதலை ஆகலாம்.

அபராதத் தொகையை செலுத்த தவறினால், அவர் மேலும் 13 மாதங்கள் அதாவது 2022-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா அபராதத் தொகையை சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினார். பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவப்பா முன் ரூ.10.10 கோடிக்கான காசோலையை சசிகலா வழக்கறிஞர் வழங்கினார். சிறையில் உள்ள சசிகலாவுக்காக வங்கி வரைவோலை எடுத்தவர்களின் விவரம் வெளியாகியுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியில் பழனிவேல் என்பவர் பெயரில் ரூ.3.25 கோடி வரைவோலை

வசந்தா தேவி என்பவர் ரூ.3.75 கோடி டி.டி. எடுக்கப்பட்டுள்ளது

ஹேமா என்பவர் ஆக்சிஸ் வங்கியில் 3 கோடி ரூபாய்க்கு டி.டி. எடுத்து வழங்கியுள்ளார்

விவேக் பெயரிலும் ஆக்சிஸ் வங்கியில் ரூ.10,000-க்கு டி.டி. எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று பலர் இணையத்தில் தேடி வருகின்றனர். சிறையில் இருந்து வெளியே வருவதில் இந்த பண விவகாரத்தால் தள்ளிப்போக வாய்ப்புள்ளது என தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News