உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடக்கம்: யார், யாருக்கு வெற்றி வாய்ப்பு!
By : Thangavelu
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்து முடிந்தது. மொத்தம் உளள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
மொத்தம் 61 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு, வார்டு வாரியாக இயந்திரங்கள் பிரித்து வைக்கப்பட்டது. மேலும் இந்த வாக்கு எண்ணிக்கையின்போது திமுகவினர் தில்லு முல்லு செய்ய வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. இதனால் வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்பவர்கள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணும் மையங்களில் பெரும்பாலான இடங்களில் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என்று அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தது.
இதனால் திமுகவுக்கு முடிவுகளை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இருந்தாலும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் முகவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என கட்சிகளின் தலைமை கேட்டுக்கொண்டது. வாக்கு எண்ணிக்கை நிலவரம் மதியம் 2 மணிக்கு மேல் தெரியவரும் என கூறப்படுகிறது. யார், யார் எத்தனை மேயர் பதவிகளை கைப்பற்றுவார்கள் என்பது 2 மணிக்கு பின்னரே தெரியவரும். இதில் சென்னை மாநகராட்சியை யார் கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளிடையே மட்டுமின்றி தமிழகம் மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
Source, Image Courtesy: Daily Thanthi