பட்டியலின மக்கள் திட்டங்களை ஏன் மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை - தி.மு.க அரசுக்கு அண்ணாமலை வைக்கும் செக்
'மத்திய அரசு கொண்டுவரும் நல்ல திட்டங்கள் நம் மாநிலத்தில் சரிவர கிடைக்கவில்லை என்று பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது' என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சுமத்தி உள்ளார்.

By : Mohan Raj
'மத்திய அரசு கொண்டுவரும் நல்ல திட்டங்கள் நம் மாநிலத்தில் சரிவர கிடைக்கவில்லை என்று பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது' என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சுமத்தி உள்ளார்.
இது குறித்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மக்கள் நலம் காப்பதற்காக மத்திய அரசு கொண்டுவரும் நல்ல பல திட்டங்கள் நம் மாநிலத்தில் சரிவர கிடைக்கவில்லை என்ற பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதன் அடிப்படையில் கட்சியின் மூத்த தலைவர்கள் மாநில, மாவட்ட நிர்வாகிகள், அணி பிரிவு தலைவர்கள் ஆகியோர் நேற்று முதல் தமிழக முழுவதிலும் உள்ள பட்டியலின சகோதரர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று சந்தித்து பேசினர்.
அப்போது அவர்கள் அந்த ஊரில் அமைந்துள்ள பொது வெளி சமுதாய கூடம், கோவில் மண்டபம் போன்ற இடங்களில் அனைத்து மக்களையும் கலந்து பேசி குறைகளை கேட்டு தெரிந்து கொண்டதற்கான தீர்வுகளை முறைப்படி ஏற்படுத்தி தரும் பணியில் அனைவரும் ஈடுபட்டனர். குறிப்பாக பட்டியலின சகோதர சகோதரிகள் தங்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.
நான் நவம்பர் 9ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி தாலுகா சாணாம்பட்டியில் உற்சாகமாக கிராம மக்களிடம் உரையாடினேன். பட்டியலின சகோதரியின் இல்லத்தில் மதிய உணவு அருந்தி ஆலயம் மண்டபத்தில் அமர்ந்து அன்பார்ந்த கிராம மக்கள் மத்தியில் உரையாடினேன்.
இந்த நிகழ்ச்சிகளுக்கு பிறகு மத்திய அரசின் திட்டங்களை பெறுவதற்கான தகுதி இருந்தும் மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேரவில்லை என்பது கசப்பான உண்மை நமக்கு புரிந்தது. எனவே ஏறத்தாழ சுமார் 8,000 கிராமங்களில் நமது நிர்வாகிகள் பட்டியல் இன சகோதர, சகோதரிகளை சந்திக்கும் பணியை செய்துள்ளனர். தமிழக மக்களுக்கு மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட நன்மைகளை மத்திய அரசு திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டும்.
அதே வேளையில் நிகழ்வாக நவம்பர் மாதம் 25ஆம் தேதி சிதம்பரத்தில் இந்திய அரசியல் அமைப்பு தினம் பா.ஜ.க சார்பில் கொண்டாடப்படுகிறது என அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்தார்.
