Kathir News
Begin typing your search above and press return to search.

RCEP ஒப்பந்தத்தில் இந்தியா ஏன் கையெழுத்திடவில்லை? முடிவின் பின்னணி என்ன?

RCEP ஒப்பந்தத்தில் இந்தியா ஏன் கையெழுத்திடவில்லை? முடிவின் பின்னணி என்ன?

RCEP ஒப்பந்தத்தில் இந்தியா ஏன் கையெழுத்திடவில்லை? முடிவின் பின்னணி என்ன?
X

Saffron MomBy : Saffron Mom

  |  26 Nov 2020 6:24 PM IST

இந்தியா, புரூனே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பில் (RCEP) 16 நாடுகள் உள்ளன. இதில் 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளும் அடக்கம்.

இக்கூட்டாண்மையின் நோக்கம், இதன் பதினாறு நாடுகளுக்கிடையே வர்த்தகத் தடைகளை அகற்றி, பொருட்கள் மற்றும் சேவைகளை தடையில்லாமல் பரிமாறிக் கொள்வதாகும்.

இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து இடவில்லை. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், "RCEP ஒப்பந்தத்தின் தற்போதைய வடிவம், அதன் அடிப்படை திறன் மற்றும் வழிகாட்டும் கொள்கைகளை முழுமையாக பிரதிபலிக்கவில்லை. இந்தியாவின் நிலுவையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் கவலைகளை வெற்றிகரமாக இது தீர்க்கவில்லை. இந்த சூழ்நிலையில் இந்தியா RCEP ஒப்பந்தத்தில் சேர முடியாது" என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் முடிவுக்கு பின்னணியில் என்னென்ன காரணிகள் இருக்கின்றன என்பதை ஆராயலாம்.

1. இந்தியா பொருளாதார மந்த நிலையை நோக்கிச் செல்லும் ஒரு நேரத்தில், இந்த மாதிரியான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது ஏற்கனவே போராடிவரும் பொருளாதாரத்திற்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

2. உள்நாட்டு தொழில்களுக்கான பாதுகாப்பு குறித்த இந்தியாவின் கவலைகளுக்கு போதுமான அளவில் இந்த அமைப்பிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. இதன் மூலம் சீனாவிலிருந்து மலிவான இறக்குமதிகள் மிகக்குறைந்த தடைகளுடன் மறுபடியும் இந்தியாவிற்குள் வரும். இந்தியாவின் உற்பத்தி மற்றும் விவசாயத் தொழிற்துறை, வர்த்தகப் பாதுகாப்பு இல்லாதது குறித்து ஏற்கனவே கவலைகளை எழுப்பியிருந்தனர்.

3. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள வர்த்தக பற்றாக்குறை ஏற்கனவே 50 பில்லியன் டாலர்களாக இருக்கும் நிலையில், RCEP ஒப்பந்தம் இந்த இடைவெளியை இன்னும் விரிவாக்கும் என்று நம்பப்படுகிறது.

RCEP பேச்சுவார்த்தைகளின் பொழுது தீர்க்கப்படாத பிரச்சினைகள் என்னென்ன?

1. RCEP ஒப்பந்தங்களின் மூலம் இந்தியாவிற்குள் வரும் இறக்குமதிகள் அதிக அளவில் அதிகரிக்கும் என்றும் அதற்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க முடியாது என்றும் நம்பப்படுகிறது. ஒரு பொருள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதை தீர்மானிக்கும் விதிமுறைகளை இந்த ஒப்பந்தத்தின் மூலம் தவிர்க்கலாம். சில நாடுகள், மற்ற நாடுகளின் வழியாக தங்கள் பொருட்களை இறக்குமதி செய்ய வைத்து குறைவான வரி மற்றும் சேவை கட்டணங்களை அனுபவிக்கும் என்ற அபாயம் இருக்கிறது.

2. ஒரு குறிப்பிட்ட அளவை இறக்குமதிகள் தாண்டும் பொழுது தானாக வரிகளை உயர்த்தலாம் என்ற விதிமுறைகளை இந்தியா இந்தியாவினால் உறுதிப்படுத்த முடியவில்லை.

3. RCEP ஒப்பந்தத்தில் மோஸ்ட் பேவர்டு நேஷன் (most favoured nation) கடமைகளை அதன் முதலீட்டு அத்தியாயத்தில் இருந்து விலக்க வேண்டும் என்று இந்தியா நினைத்தது. ஏனெனில் இந்தியா தனது கூட்டாளிகளுக்கும், நண்பர்களுக்கும் அளித்துவந்த பலன்களை தங்களுடன் எல்லை பிரச்சனைகளை கொண்டிருக்கும் நாடுகளுக்கு அளிக்க விரும்பவில்லை.

4. சில நாடுகளுக்கு மட்டுமே இந்தியா அளித்து வந்த பலன்களை (உதாரணமாக பாதுகாப்பு துறையில்) அனைத்து RCEP உறுப்பினர்களுக்கும் இந்தியா அளிக்க வேண்டும் என்று இந்த ஒப்பந்தம் இந்தியாவைக் கட்டாயப்படுத்தும்.

5. சீனா உள்ளிட்ட நாடுகளில் சந்தைகளை அணுகுவதற்கு தெளிவான உறுதி அளிக்க முடியவில்லை.

6. 15 RCEP உறுப்பினர்களில் பதினோரு நாடுகளுடன் இந்தியா பெருமளவு வர்த்தக பற்றாக்குறையை கொண்டுள்ளது. ஏற்கனவே இருக்கும் இருதரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் (Free Trade Agreement) மூலம் இந்தியாவின் ஏற்றுமதியினை அதிகப்படுத்த முடியவில்லை.

சீனா காரணி:

RCEP என்பது சீனாவினால் 2012ல், மற்றொரு FTA அமைப்பான TPP (Trans-Pacific Partnership)யை எதிர்கொள்வதற்காக பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவினால் முன்னெடுக்கப்பட்ட இந்த TTP சீனாவை விலக்கி வைத்தது. ஆனால் 2016 இல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த அமைப்பில் இருந்து இருந்து தனது நாட்டை விலக்கிக் கொண்டார். அப்பொழுதிலிருந்து சீனாவுடன் வர்த்தகம் செய்வதை தடுக்கும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு எதிராக RCEP பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சீனா தான் இந்த RCEP நாடுகளில் அதிக அளவு ஏற்றுமதி செய்கிறது. அதனால் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தப் பிராந்தியத்தின் வர்த்தக விதிமுறைகளை சீனா வடிவமைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சீனா அதிகபட்சமாக அதிக வர்த்தக உபரி அதாவது சர்ப்ளஸ் கொண்ட நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. அமெரிக்காவுடனான சீனாவின் சர்ப்ளஸ் நிச்சயமாக மிகப் பெரியது. ஆனால் மொத்த இருதரப்பு வர்த்தகத்தின் சதவிகிதமாக அல்லது தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக பார்த்தால் சீனாவுடனான இந்திய வர்த்தக பற்றாக்குறை, அமெரிக்காவை விட அதிகமாக உள்ளது. 2018-ஆம் ஆண்டில் சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.2 சதவீதமாக இருந்தது.

சீனாவின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் இந்திய உற்பத்தி மற்றும் போட்டித்தன்மையை பெருமளவு குறைகின்றன.

இந்தியா ஏற்கனவே RCEPயில் உள்ள 15 நாடுகளில் 12 நாடுகளுடன் இலவச வர்த்தக ஒப்பந்தங்களை கொண்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவுடன் ஒரு FTA பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியா ஏற்கனவே பல நாடுகளுடன் FTA க்களை தொடர்ந்து பின்பற்றி அதிக பலன்களை பெற்றதில்லை.

வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், "வெளிப்படைத்தன்மை என்ற பெயரில் மானியம் பெற்ற பொருட்களையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய நாம் ஒப்புக் கொண்டு இருக்கிறோம். இதையெல்லாம் உலகளாவிய வர்த்தகம், வெளிப்படையான வர்த்தகம் என்ற பெயரில் நியாயப் படுத்திக் கொண்டிருக்கிறோம். இப்படி அதிகப்படியான பொருட்களை இறக்குமதி செய்யும் FTA வர்த்தக ஒப்பந்தங்களின் மூலம் இந்தியா வர்த்தக பற்றாக்குறையை அனுபவித்து, உற்பத்தியை குறைத்து, வேலைவாய்ப்பின்மைக்கு வழிவகுத்து, இறக்குமதிக்கு அதிகபட்சமாக சார்ந்திருக்கும் நிலைக்கு உள்ளாகி இருப்பதாக கூறியிருக்கிறார்.

இந்தியா ஏற்கனவே தெற்கு ஆசிய நாடுகளுடன் ASEAN ஒப்பந்தம் கொண்டுள்ளது. சீனாவுடனும் ஒரு ஒப்பந்தம் உள்ளது. வர்த்தக வெளிப்படைத்தன்மை விகிதத்தில் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான், சீனாவை விட அதிகமான தரத்தில் உள்ளது.

எனவே இந்த RCEP ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்து இடாமல் தற்போதைக்கு இருப்பது சரியான முடிவே என்று பலராலும் வரவேற்கப்படுகிறது. அகில இந்திய கிசான் ஷங்கர்ஷ் ஒருங்கிணைப்பாளர் சிங் இந்த முடிவை வரவேற்றுள்ளார். இந்த நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்திற்கு சாதகமானது என்று சுதேசி ஜாக்ரன் மன்ச் இன் துணை ஒருங்கிணைப்பாளர் அஸ்வானி மகாஜன் தெரிவித்து, இத்தகைய துணிச்சலான நடவடிக்கை எடுத்ததற்காக பிரதமரை பாராட்டி இருக்கிறார்.

Courtesy: Samvadaworld.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News