தாமரை இல்லாமல் ஆட்சி மலராது என்ற சூழ்நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது என சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில்: மத்திய தலைமையின் கீழ்தான் மாநில பா.ஜ.க., தலைமை இயங்குவதை அதிமுகவினர் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆட்சியில் இருந்தபோது கிராமசபை கூட்டங்களை நடத்தாத திமுக தற்போது அரசியலுக்காக கிராமசபையை நடத்துகிறது.
தாமரை இன்றி ஆட்சி மலராது என்ற சூழ்நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது’’ என்றார். அ.தி.மு.க., -பா.ஜ.க., இடையே கூட்டணி குறித்தும் கொள்கை குறித்தும் கருத்து மோதல் நிலவி வரும் நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கும் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.