தலை இருக்கும் போது வால் ஏன் ஆடுது? ஆட்டத்தை ஒன்ட நறுக்க ஸ்டாலின் போட்ட உத்தரவு! குஷியில் சீனியர்கள்!
தலை இருக்கும் போது வால் ஏன் ஆடுது? ஆட்டத்தை ஒன்ட நறுக்க ஸ்டாலின் போட்ட உத்தரவு! குஷியில் சீனியர்கள்!
By : Muruganandham M
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,திமுக பேனர்களில் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் படங்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அவரது கடிதத்தில், பதாகைகள், சுவரொட்டிகள் என எதிலும் பெரியார், அண்ணா, கலைஞர், கழகத் தலைவர் தவிர வேறு யாருடைய படங்களும் இடம்பெறக் கூடாது.பகுதி, ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து இடங்களுக்கும் முழுமையாகச் சென்று சந்திப்பு நடத்திட வேண்டும்.
“இலக்கும் - நோக்கும் 200🏴🚩”
— DMK (@arivalayam) December 22, 2020
- கழக தலைவர் @mkstalin அவர்களின் மடல்!
Link: https://t.co/BS54VXfZnB#MKStalin #தமிழகம்_மீட்போம் #Mission200 pic.twitter.com/AOwKlbVyM4
பத்து நாட்களில் அனைத்து வார்டு, ஊராட்சிகளை முழுமையாக சந்தித்து இருக்க வேண்டும். குரல் வாக்கெடுப்பு மூலம், ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற தீர்மானத்தைப் பலத்த ஒலியுடன் நிறைவேற்ற வேண்டும்.திமுக சார்பில் வழங்கப்படும் தொப்பிகள், ஆட்சி மீதான குற்றப்பத்திரிகைகள் ஆகியவற்றை விநியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
துரைமுருகன், டி.ஆர். பாலு, கனிமொழி, ஆ.ராசா, கே.என். நேரு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இருக்கும் போது, 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை கூட, உதயநிதி ஸ்டாலினே தொடங்கினார். இதனால், திமுகவில் உட்கட்சி பூசல் தலைதூக்கியது.
கட்சித் தலைவரின் மகன் என்பதால், ஸ்டாலினிடம் இதனை நேரடியாக தெரிவிக்க தலைவர்கள் தயக்கம் காட்டி வந்தனர். ஒருசிலர் மட்டும் வெளிப்படையாக போட்டுடைத்தனர். இதனால், அவர்கள் தற்போது ஓரங்கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், உதயநிதிக்கான எதிர்ப்பையும், கட்சியின் உட்பூசலையும் கட்டுக்குள் கொண்டு வர திட்டமிட்டே ஸ்டாலின் பேனர் விவகாரத்தில் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.