நெருப்பில்லாமல் பொங்கல் பானையில் பொங்கலை கிண்டும் ஸ்டாலின் - ஏன் இந்த விளம்பரம்?
நெருப்பில்லாமல் பொங்கல் பானையில் பொங்கலை கிண்டும் ஸ்டாலின் - ஏன் இந்த விளம்பரம்?

தி.மு.க சார்பில் திருவள்ளூர் மாவட்டம் நத்தம் ஊராட்சியில் உழவர் பெருமக்களுடன் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது. அதில் கலந்துகொண்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்க்கா ஸ்டாலின் ஆகியோர் அங்கிருந்த பொங்கல் பானையில் பொங்கலை கிண்டுவது போல் பாசாங்கு செய்யும் புகைப்படத்தை தி.மு.க சார்பில் வெளியிட்டனர்.
அந்த புகைப்படத்தில் பொங்கும் பொங்கல் பானையில் நெருப்பில்லை. மேலும் காலில் செருப்புடன் பொங்கலை கிண்டும் ஒரே தமிழக அரசியல் தலைவர் ஸ்டாலினாகதான் இருப்பார். அப்படி ஒரு புகைப்படம் அது! இணையதறத்தில் வழக்கம்போல் நெடிசன்களால் கிண்டல் செய்யப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.
பிரச்சாரத்தில் நாடகம், கருத்துக்களை கூறுவதில் நாடகம், கூட்டணியில் நாடகம், மக்களிடம் நாடகம், எதிர்க்கட்சிகளிடம் நாடகம், கூட்டணி கட்சிகளிடம் நாடகம் என தி.மு.க'வின் நாடகத்தனத்திற்கு மத்தியில் கிண்டும் பொங்கல் பானையும் நாடகம்தான். தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு அனைத்துமே இப்படி நாடகத்தனம்தான் போலும்.