ரவுடிகளை விடுவிக்கனும்.. அடியாட்களுடன் காவல் நிலையத்தில் ரகளை செய்த திமுக எம்.எல்.ஏ., ஆட்சியில் இல்லாதபோதே இப்படியா.?
ரவுடிகளை விடுவிக்கனும்.. அடியாட்களுடன் காவல் நிலையத்தில் ரகளை செய்த திமுக எம்.எல்.ஏ., ஆட்சியில் இல்லாதபோதே இப்படியா.?
By : Kathir Webdesk
சென்னை, புரசைவாக்கத்தை சேர்ந்த 5 ரவுடிகள், நள்ளிரவில் செல்லும் பொதுமக்களை அடித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த 5 ரவுடிகள் நள்ளிரவில் சென்ற பொதுமக்களை தாக்கி வந்துள்ளனர். இது பற்றிய தகவலை பொதுமக்கள் போலீசாருக்கு தெரியபடுத்தியுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதிக்கு 2 போலீசார் சென்றபோது அவர்களையும் அடித்துள்ளனர். இதனால் அதிக எண்ணிகையுடன் போலீசார் சென்று ரவுடி கும்பலை தூக்கிசென்று காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
இந்நிலையில், சற்று நேரத்தில் திமுக எம்.எல்.ஏ., ரவிச்சந்திரன் 10 அடியாட்களுடன் காவல்நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது போலீசாரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டார். உடனடியாக பிடித்து வைத்துள்ள ரவுடிகளை விடுவிக்கனும் என்று போலீசாரிடம் மிரட்டியுள்ளார் எம்.எல்.ஏ., ரவிச்சந்திரன். அப்போது ரவுடிகளால் மிரட்டப்பட்ட பொதுமக்கள் காவல்நிலையத்திற்கு வந்து புகார் அளித்தனர்.
அப்போது பொதுமக்களுக்கும் எம்.எல்.ஏ.வுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. கஞ்சா விற்கும் ரவுடிகளுக்கு எதற்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள் என்று பொதுமக்கள் கேள்வி கேட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த எம்.எல்.ஏ., பொதுமக்களை தாக்க முயற்சி செய்தார்.
இதனால் அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவியத் தொடங்கியதும் அந்த இடத்தில் இருந்து எம்.எல்.ஏ., நைசாக நழுவிசென்றார். ஆட்சியில் இல்லாதபோதே திமுகவினர் இப்படி ரகளை செய்கின்றனரே. ஒரு வேளை ஆட்சியில் அமர்ந்தால் தமிழகத்தின் நிலைமை எப்படி இருக்கும் என்று பொதுமக்கள் தற்போது சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர்.