பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலையை வழங்காமல் ஏமாற்றும் தி.மு.க. அரசு: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி!
By : Thangavelu
பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் இலவசமாக வழங்கப்படும் வேட்டி மற்றும் சேலையை திமுக அரசு இந்தாண்டு வழங்காமல் ஏமாற்றுவது சரியா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆண்டு தோறும் கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கத்திலும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கடந்த 1983ம் ஆண்டு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை தொடங்கினார். அதன் பின்னர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து வந்தார்.
அதனை தொடர்ந்து அதிமுக இலவசமாக வேட்டி, சேலைகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் 15 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் குடும்பங்கள், 54 ஆயிரம் விசைத்தறி நெசவாளர்களின் குடும்பங்கள் பயன்பெற்றது. ஆனால் ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசு பொங்கல் திருநாளில் வழங்கும் இலவச வேட்டி, சேலையை வழங்காமல் உள்ளது. இதன் மூலம் விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வும் பாதிக்கப்படுகிறது. எனவே பொங்கலுக்கு இன்னும் சில நாட்கள்தான் உள்ளது. உடனடியாக வேட்டி, சேலைகளை வழங்க வேண்டும் என்று திமுக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
Source, Image Courtesy:Puthiyathlaimurai