Begin typing your search above and press return to search.
இந்த தேர்தலில் தேறுவோமா.? பிரபல நடிகரை களத்தில் இறக்குகிறார்கள்.. ஸ்டாலின் புலம்பல்.!
இந்த தேர்தலில் தேறுவோமா.? பிரபல நடிகரை களத்தில் இறக்குகிறார்கள்.. ஸ்டாலின் புலம்பல்.!
By : Kathir Webdesk
சென்னையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அடுத்த வருடம் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து தேர்தல் பரப்புரையை தொடங்குகிறேன். கிராமசபை கூட்டங்கள் முடிந்தபிறகு நான் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ளேன் என்று கூறினார்.
வருகின்ற தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் அனைவரையும் தோற்கடிக்கப்பட வேண்டும். திமுக வெற்றி பெற்றுவிடும், ஆனால் அந்த வெற்றியை எளிதில் பெற விட மாட்டார்கள். திமுகவை தோற்கடிப்பதற்காக சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கின்றனர் என்று பேசியுள்ளார்.
அவர் சொல்வது நடிகர் ரஜினியைத்தான் என்று அனைவருக்கும் தெரியும். இந்த தடவையும் திமுக படுதோல்வி அடைவது உறுதி என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story