Begin typing your search above and press return to search.
3% வைத்துகொண்டு சசிகலாவின் வருகை தாக்கத்தை ஏற்படுத்தாது.. அமைச்சர் ஜெயகுமார்.!
3% வைத்துகொண்டு சசிகலாவின் வருகை தாக்கத்தை ஏற்படுத்தாது.. அமைச்சர் ஜெயகுமார்.!

By :
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று விடுதலையான சசிகலாவின் வருகையால் அதிமுகவில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஜெயகுமார், ‘‘ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட வேண்டும் என்பது உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களின் விருப்பம். இதன் காரணமாகத்தான் நினைவிடம் திறக்கப்பட்டது.
மேலும், நினைவிட வளாகத்தில் டிஜிட்டல் வேலைகள் நடந்து வருகிறது. இதன் காரணமாகத்தான் நினைவிடம் மூடப்பட்டுள்ளது. மேலும், சசிகலா வருகையால் அ.தி.மு.க.வில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவர்களிடம் உள்ள 3 சதவீத ஓட்டுதான் அவர்களின் ஒட்டுமொத்த சக்தி. இதனை மக்கள் உணர்த்திவிட்டனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Next Story