தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் ஓவைசி - யாருடன் கூட்டணி?
தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் ஓவைசி - யாருடன் கூட்டணி?
By : Mohan Raj
வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி வைக்க, தமிழக அரசியல் கட்சிகள் முன்வந்தால் சேர்க்கத் தயார் என ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.
ஓவைசி'யின் கட்சி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் இம்முறை 30 தொகுதிகளிலாவது போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. திருச்சியில் நடந்த கட்சி கூட்டத்தில், இதுகுறித்து அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தனியார் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், ’’தமிழகத்தில் கூட்டணி அமைக்க, கமல் மற்றும் சீமான் ஆகியோருடன் நான்பேசவில்லை; பேசியதாக, வேகமாக வதந்தி பரவி வருகிறது. இந்த நிமிடம் வரை, எந்த தலைவருடனும் பேசவில்லை என்பதால், தனியாகத்தான் உள்ளோம். கூட்டணி உருவாக்க யாரும் வேண்டுகோள் விடுத்து முன்வந்தால், தாராளமாக சேர்த்துக் கொள்வேன்" என கூறினார்.
மேலும் பேசிய அவர், "தமிழகத்தில், எவ்வளவு தொகுதிகளில், போட்டியிட வேண்டும் என இன்னும் முடிவு செய்யவில்லை. கட்சியின் தமிழக நிர்வாகிகளுடன் பேசி, களத்தில் உள்ள நிலவரம் அறிந்த பின், தீர்க்கமாக முடிவு செய்து, களம் இறங்குவோம்" என தெரிவித்துள்ளார்.
ஓவைசி தி.மு.க'வுடன் கூட்டணி சேராத பட்சத்தில் சிறுபான்மையினரின் வாங்குகளை மட்டுதே நம்பி களமிறங்கும் தி.மு.க'விற்கு இது பெரிய அடியாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.
ஏனென்றால் ஏற்கனவே இந்து சமுதாய மக்களின் வெறுப்பை தி.மு.க சம்பாதித்து விட்டதால் பல இந்து குடும்பங்களின் வாங்கு தி.மு.க'விற்கு இல்லாமல் போய்விட்டது இதனாலேயே கடந்த வாரம் "தி.மு.க'வை ஆன்மீகத்தை வைத்து வீழ்த்த முடியாது" என ஸ்டாலின் பேசினார். இந்ந நிலையில் இஸ்லாமிய வாக்கு வங்கியும் ஓவைசியால் பாதிக்கப்படும் பட்சத்தில் தி.மு.க'வின் வாக்கு வங்கியில் பெரிய பாதிப்பை இது ஏற்படுத்தும்.