பதறிய ஸ்டாலின்! கிராமசபை கூட்டத்தில் ஓ.பி.எஸ்.க்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்!
பதறிய ஸ்டாலின்! கிராமசபை கூட்டத்தில் ஓ.பி.எஸ்.க்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்!
By : Kathir Webdesk
தி.மு.க. சார்பில் கிராமசபை என்ற கூட்டத்தை தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் நடத்தி வருகின்றனர். இந்த கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டு முன்கூட்டியே ஏற்பாடு செய்த பெண்களிடம் மைக்கை கொடுத்து பேச சொல்வார். அந்த பெண்களும் எழுதி கொடுத்த கேள்வியை ஸ்டாலினிடம் கேட்பார்கள். அதற்கு பதில் அளித்து பெருமைபட்டுக்கொள்வார் ஸ்டாலின்.
இதே போன்று தேனி மாவட்டத்தில் திமுக சார்பில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது முன்கூட்டியே ஏற்பாடு செய்த பெண்கள் ஸ்டாலினிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்.
அப்போது லட்சுமி என்ற பெண் துணை முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தோனியில் பேசினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ஸ்டாலின் ஒரு நிமிடம் பதறிபோனார். கூட்டத்தில் இருந்த அனைவரின் முகத்திலும் ஒரு விதமான பதற்றம் இருந்தது.
இதனிடையே அந்த பெண் பேசியது தவறு என்றும், மேலும், அது போன்று பேசக்கூடாது என்று அப்பெண்ணிடம் ஸ்டாலின் கூறினார். பேசிய வார்த்தைகளை திரும்ப பெறும்மாறு கூறினார். திமுகவில் ஆண்கள்தான் ரவுடியாக இருப்பார்கள் என்றால், பெண்களும் ரவுடியை போன்று செயல்படுவது தமிழக மக்கள் கவனித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.