வி.ஐ.பி. பாதுகாப்பில் மறுபடியும் பெண் போலீஸ் ! கண்டும் காணாமல் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்!
முதலமைச்சர் மற்றும் விஐபிக்களின் வாகனங்கள் செல்லும் பகுதிகளில், பெண் போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அதனை மீறுகின்ற வகையில், முதலமைச்சர் செல்லும் பாதைகளில் மறுபடியும் பெண் போலீசார் பணியில் ஈடுபட்டிருப்பதை கண்டும் காணாமல் போல் கடந்து செல்வதாக கூறப்படுகிறது.
By : Thangavelu

கடந்த 13ம் தேதி முதல் நிதிநிலை அறிக்கை மற்றும் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சட்டப்பேரவை தொடங்கிய நாள் முதல் இன்று வரை முதலமைச்சர் எம்.எல்.ஏ.க்கள் செல்லும் பகுதிகளில் பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு முன்னர் முதலமைச்சர், டிஜிபி ஆகியோர் பெண் போலீசார் விஜபி பணியில் ஈடுபட மாட்டார்கள் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் பெண் போலீசார் ஈடுபட்டிருப்பதை பார்த்து சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Source, Image Courtesy: News J
https://www.newsj.tv/view/Female-police-again-in-VIP-security-...!-Missing-Chief-Minister-...-45200