Kathir News
Begin typing your search above and press return to search.

முடியலைன்னு சொல்லி மத்திய அரசிடம் எழுதி கொடுங்கள், TANTEA நிர்வாகத்தை மத்திய அரசு பார்த்துக்கொள்ளும் - தி.மு.க அரசுக்கு சவால் விட்ட அண்ணாமலை

நஷ்டத்தில் இயங்கும் TANTEA நிறுவனத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்க தயாரா? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

முடியலைன்னு சொல்லி மத்திய அரசிடம் எழுதி கொடுங்கள், TANTEA நிர்வாகத்தை மத்திய அரசு பார்த்துக்கொள்ளும் - தி.மு.க அரசுக்கு சவால் விட்ட அண்ணாமலை

Mohan RajBy : Mohan Raj

  |  21 Nov 2022 2:02 AM GMT

நஷ்டத்தில் இயங்கும் TANTEA நிறுவனத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்க தயாரா? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

நீலகிரி வால்பாறையில் உள்ள TANTEA தொழிலாளர்களின் பிரச்சினைக்காக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, 'முதன்முதலாக தமிழகத்தில் பத்துக்கு மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து ஆங்கிலேயர்கள் அழைத்துச் சென்று இலங்கையில் இருக்கக்கூடிய தலைமன்னாருக்கு அகதிகளாக கப்பலில் அழைத்துச் செல்லப்பட்டபோது ஏராளமான தமிழர்கள் உயிரிழந்தனர். பின்னர் சிரிவோமா சாஸ்திரி ஒப்பந்தம் அடிப்படையில் மீண்டும் தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக TANTEA என்பது குடியுரிமையோடு தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு வழங்கப்பட்டது.

ஆனால் TANTEA நிர்வாகம் தற்பொழுது நஷ்டத்தில் இயங்கி வருவதாக தமிழக அரசு 5,315 ஏக்கரை வனத்துறைக்கு ஒப்படைப்பதாக கூறியிருப்பது வேதனை செய்கிறது. TANTEA'யை தமிழக அரசு நடத்த முடியவில்லை மத்திய அரசிடம் எழுத்துபூர்வமாக எழுதிய கொடுத்து விடுங்கள். TANTEA கழகத்தை மத்திய அரசிடம் ஒப்படைத்தால் நஷ்டத்தில் இயங்கும் நிர்வாகத்தை லாபத்தில் கொண்டு செல்வோம் அப்படி கொண்டு சென்றால் தமிழக முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்வாரா? என முதல்வருக்கு சவால் விடுவதாக கூறினார்

அதேபோல் மின்சாரத்துறை லட்சம் கோடி கடனில் உள்ளது, ஆனால் TANTEA 28 கோடியில் மட்டுமே நஷ்டத்தில் உள்ளது மின்துறை வேண்டும் TANTEA வேண்டாமா?' எனவும் கேள்வி எழுப்பினர்.


Source - News 7 Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News