நேற்று கட்சி தொடங்கிய கமல்ஹாசனுக்கு பிரதமரிடம் விவாதம் செய்ய வேண்டுமா: வானதி சீனிவாசன் கடும் தாக்கு.!
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளரும், பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் ‘துக்கடா அரசியல்வாதி’ என நடிகர் கமலஹாசன் விமர்சனம் செய்திருந்தார்.
By : Thangavelu
நேற்று கட்சி தொடங்கிய கமல்ஹாசனுக்கு பிரதமர் மோடியுடன் விவாதம் செய்ய வேண்டும் என்று, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளரும், பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் 'துக்கடா அரசியல்வாதி' என நடிகர் கமலஹாசன் விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில், தெற்கு தொகுதிக்குட்பட்ட சொர்ணாம்பிகா லே-அவுட் பகுதியில் வானதி சீனிவாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, நான் இதுவரை மக்களுக்கான சேவைகளை மட்டுமே செய்து வருகிறேன். இந்த தொகுதி மக்களுக்கு அனைத்து திட்டங்களையும், மத்திய, மாநில அரசுகளிடம் பேசி செயல்படுத்த முடியும். நேற்று கட்சி துவங்கிய கமல்ஹாசன் பிரதமர் மோடியுடன் நேரடி விவாதம் செய்ய வேண்டுமா? உலகிலேயே மிகப் பெரிய கட்சி பாஜக என்றார்.
மேலும், கமல்ஹாசன் விமர்சனம் பற்றி அவர் பேசும்போது: "என்னை துக்கடா அரசியல்வாதி என கூறிய கமல் இதுவரை மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. அவர் செய்தது எல்லாமே லிப் சர்வீஸ் மட்டுமே. அதாவது உதட்டளவிலும் உதடுகளுக்கும் மட்டுமே சேவை செய்து வந்தவர் கமல் என கடும் விமர்சனம் வைத்தார். நடிகர் கமல்ஹாசனுக்கு அரசியல் பக்குவம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.