பொங்கல் முடிந்தும் பரிசுத் தொகை பெறலாம்.. அமைச்சர் செல்லூர் ராஜூ.!
பொங்கல் முடிந்தும் பரிசுத் தொகை பெறலாம்.. அமைச்சர் செல்லூர் ராஜூ.!
![பொங்கல் முடிந்தும் பரிசுத் தொகை பெறலாம்.. அமைச்சர் செல்லூர் ராஜூ.! பொங்கல் முடிந்தும் பரிசுத் தொகை பெறலாம்.. அமைச்சர் செல்லூர் ராஜூ.!](https://kathir.news/static/c1e/client/83509/uploaded/ed807ecb4db87f8e4b7189819a7a7b94.jpg)
தைத் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ரூ.2,500 பணம், அரிசி, பருப்பு, முந்திரி உள்ளிட்ட பரிசுத் தொகுப்பும் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி அதற்கான டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணி கடந்த 31ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், வருகின்ற 4ம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசியதாவது: பொங்கலுக்கு முன்னர் ரூ.2,500 பரிசுத்தொகை பெற முடியாதவர்கள் ஜனவரி 19ம் தேதி பெறலாம் என்றும் ஜனவரி 4ம் தேதி முதல் காலையில் 100 பேருக்கு, மதியம் 100 பேருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், தேர்தல் நேரத்தில் கூட்டணி முடிவு செய்யப்படும் என்றும் அதுவரை பழைய கூட்டணியினர் நண்பர்களாக இருப்பர் என்றும் கூட்டணியில் இறுதி நேரத்தில் தொகுதிகள் வழங்குவதில் சில மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் பேசினார்.