Kathir News
Begin typing your search above and press return to search.

நீங்க சமூக பேச வெட்கப்படணும் சென்ட்ராயன் - சமூகநீதி நாடக கும்பலை வெளுத்த ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டில் சமூகநீதி, தீண்டாமை கூடாது என பேசி போலி அரசியல் செய்யும் அரசியல் கட்சிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி கடுமையாக விமர்சித்துள்ளார்.

நீங்க சமூக பேச வெட்கப்படணும் சென்ட்ராயன் - சமூகநீதி நாடக கும்பலை வெளுத்த ஆர்.என்.ரவி
X

Mohan RajBy : Mohan Raj

  |  14 Feb 2023 7:09 AM IST

தமிழ்நாட்டில் சமூகநீதி, தீண்டாமை கூடாது என பேசி போலி அரசியல் செய்யும் அரசியல் கட்சிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அடிக்கடி கூறும் வார்த்தை சமூகநீதி, இந்த சமூக நீதி என்கிற வார்த்தையை திமுக கூட்டணி கட்சிகளுக்கு உபயோகிக்க கூடாது என்ற நிபந்தனையை விதித்தால் அனைத்து திமுக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விதித்தால் கண்டிப்பாக பலருக்கு வேறு எதுவும் பேசவே தோணாது. ஆனால் தமிழகத்தில் சமூக நீதியே இல்லாமல் நடைபெறும் சாதிய ரீதியான கொடுமைகள் அதிகம்.

கடந்த டிசம்பர் மாதம் தமிழகத்தில் நடந்த சம்பவம் இதற்க்கு மிகப்பெரிய உதாரணம், கடந்த டிசம்பரில் புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சியில், இறையூர் கிராமத்தில் உள்ள பகுதியில் 50க்கும் மேற்பட்ட பட்டியலினத்து குடும்ப மக்கள் வசித்து வரும் பகுதியில் அவர்கேளுக்கென இருந்த நீர் தேக்க தொட்டியில் மனித மலம் கலந்து அவர்களை குடிக்க வைத்த கொடூரம் நடந்தது.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வெள்ளலூர் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது, ஆனால் சம்பவம் நடந்து இதுவரை 3 மாதங்கள் ஆகியும் அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று மக்களுக்கு இதுவரை விளக்கவில்லை, முதல்வர் ஸ்டாலின் இதுவரை 3 மாதங்கள் ஆகியும் புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்திற்கு சென்று மக்களை எட்டிக்கூட பார்க்கவில்லை. இவ்வளவு ஏன் பட்டியலின பாதுகாவலர் என கூறி அரசியல் செய்யும் விசிக கட்சியின் திருமாவளவன் கூட அங்கு சென்று எட்டி பார்க்கவில்லை..

அந்த நிலையில் உள்ளது தமிழகத்தில் சமூக நீதி, இதைத்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 'பிரதமர் மோடியும் அம்பேத்கரும்' என்ற நூல் வெளியீட்டு விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது: "அம்பேத்கர் ஒரு தேசியவாதி. ஆங்கிலேயர்கள் பட்டியலின மற்றும் பழங்குடியினர் அரசியல் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் முறையைக் கொண்டுவந்து நாட்டை பிரித்தாள முயன்றபோது அதனை மலைபோல் இருந்து தடுத்தவர் அம்பேத்கர். ஆங்கிலேயர்களின் எண்ணத்தை செயல்படுத்த அவர் அனுமதிக்கவில்லை.

தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக நாம் என்ன செய்திருக்கிறோம்? நமது மாநிலத்தில் சமூகநீதி குறித்து நிறைய பேசுகிறோம். ஆனால், அதற்கு அடுத்த நாளே பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் குடியிருப்புப் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தது, பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டது, கோயிலுக்குள் பட்டியலின மக்களை அனுமதிக்க மறுப்பது போன்ற சம்பவங்கள் வேதனையளிக்கின்றன.

அதேபோல் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களை எடுத்துக்கொண்டால் யாரும் கைது செய்யப்படுவது இல்லை. அதோடு குற்றவியல் நடைமுறை சட்டம் மிக மோசமானதாக உள்ளது. நமது மாநிலத்தில் இவ்வாறு நடப்பது வலியை ஏற்படுத்துகிறது. பட்டியலின பெண்கள் தொடர்புடைய பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 7 சதவீத குற்றவாளிகளுக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 93 சதவீதம் பேரை காவல்துறை சுதந்திரமாக விட்டுவிடுகிறது. இந்த நிலையில் நாம் சமூகநீதியைப் பற்றியும் அம்பேத்கரைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறோம். பட்டியலின மக்களுக்கு வீடு கட்டுவதற்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் 30 சதவீதம் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியத் தொகை வேறு திட்டங்களுக்காக செலவழிக்கப்படுவதாகவும் சிஏஜி அறிக்கை கூறுகிறது. ஆனால் நாம் சமூகநீதியைப் பற்றி பேசுகிறோம்." இவ்வாறு அவர் மாநில அரசை மறைமுகமாக குற்றம் சாட்டி பேசியுள்ளார்.

ஆளுநர் இப்படி பேசிய விவகாரம் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக போலி சமூகநீதி பேசும் அரசியல் தலைவர்களை கொதிப்படைய செய்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News