இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் - அண்ணாமலை அழைப்பு
இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
By : Bharathi Latha
அரசியல் களத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, இன்றைய இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. 1997 இல் இருந்து 2022 வரை படித்த மாணவர்கள், இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டு இருந்தார்கள். முன்னாள் மாணவர் என்ற முறையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அரசியல் என்பது ஒரு ஆரோக்கியமான களம். அதை ஆரோக்கியமாக வைத்திருக்க இளைஞர்களால் மட்டும்தான் முடியும். ஆகையால் இளைஞர்கள் அதிகமாக அரசியலுக்கு வரவேண்டும். அரசியலை யாரும் ஒதுக்க கூடாது தங்களால் அரசியலுக்கு வரவில்லை என்றால், தங்கள் தொகுதியில் உள்ள நல்லவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலமாக தங்களுடைய பகுதி மக்களுக்கு நன்மைகளை கொண்டு போய் சேர்க்குவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் மொத்த சிஸ்டமும் கெட்டுவிட்டது என்று கூறுவது உண்மைதான். அதை உடனடியாக சரி செய்ய முடியாது. ஒவ்வொரு பகுதியாக அவரவர் கடமையை உணர்ந்து அவரவருக்கு உரிய சமூகப் பணிகளை ஆற்ற வேண்டும். முன்னாள் மாணவர் சந்திப்பு அடிக்கடி நடக்க வேண்டியது ஒரு நல்ல விஷயம் என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த பள்ளி முன்னால் மாணவர் மாணவியர்களுக்கு தல பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி அழைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Dinamalar News