Kathir News
Begin typing your search above and press return to search.

"உங்க மகன் மூத்த நிர்வாகியை மதிப்பதில்லை, ஜெயிச்சு இத்தனை வருஷமா ஒரு நன்றி கூற சொல்ல வரலை" - ப.சிதம்பரத்திடம் மகன் கார்த்தி பற்றி புகார் பட்டியல் வாசித்த சிவகங்கை காங்கிரஸார்

உங்க மகன் மூத்த நிர்வாகிகளை மதிப்பதில்லை, ஏன் நன்றி சொல்ல கூட வரவில்லை என கார்த்தி ப.சிதம்பரம் குறித்து ப.சிதம்பரம் முன்னிலையில்

உங்க மகன் மூத்த நிர்வாகியை மதிப்பதில்லை, ஜெயிச்சு இத்தனை வருஷமா ஒரு நன்றி கூற சொல்ல வரலை - ப.சிதம்பரத்திடம் மகன் கார்த்தி பற்றி புகார் பட்டியல் வாசித்த சிவகங்கை காங்கிரஸார்

Mohan RajBy : Mohan Raj

  |  3 Jan 2023 11:06 AM GMT

உங்க மகன் மூத்த நிர்வாகிகளை மதிப்பதில்லை, ஏன் நன்றி சொல்ல கூட வரவில்லை என கார்த்தி ப.சிதம்பரம் குறித்து ப.சிதம்பரம் முன்னிலையில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் புகார் பட்டியல் வசித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்ட மானாமதுரை காங்கிரஸ் அலுவலகத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் பேசிய 'ப.சிதம்பரம் கட்சியினருக்கு வாக்குச்சாவடிகளை சீரமைக்க வேண்டும், அதற்கு குழு ஏற்பாடு செய்யுங்கள்' என கூறி பேசியுள்ளார்.

அப்போது நகர தலைவர் எம்.கணேசன் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மானாமதுரை வந்து கட்சி கொடியை ஏற்றினார். ஆனால் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுக்கவில்லை என புகார் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த கூட்டத்தில் மேலும் பேசிய கட்சியின் தொண்டர்கள் கார்த்தி ப.சிதம்பரம் நன்றி சொல்ல தொகுதிக்கு வரவில்லை, கட்சி மூத்த தலைவர்களை மதிப்பதில்லை, இவ்வளவு ஏன் தேர்தலில் வெற்றி பெற்று பின்னர் கட்சியினரை சந்தித்து நன்றி கூறக்கூட வரவில்லை என புகார் தெரிவித்தனர்.

உடனே ப.சிதம்பரம் சமாளிக்கும் விதமாக கொரோனா காலம் என்பதால் கார்த்தி ப.சிதம்பரம் தொகுதி பக்கம் வரவில்லை என கூறினார். பின்னர் செய்தியாளர்களின் கைபேசிகளை வாங்கி பதிவுகளை அளிக்குமாறு ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியினருக்கு உத்தரவிட்டார். செய்தியாளர்களின் கைப்பேசியை தருமாறு காங்கிரஸ் கட்சியினர் கேட்ட சமயம் செய்தியாளர்கள் அங்கிருந்து தர முடியாமல் கிளம்பியதால் அங்கு சர்ச்சை ஏற்பட்டது.

கார்த்திக் சிதம்பரம் அங்குள்ள கட்சியின் மூத்த நிர்வாகிகள் யாரையும் மதிக்கவில்லை ஓட்டு போட்ட மக்களுக்கு நன்றி சொல்லக் கூட தொகுதிக்கு போகவில்லை என்பதால் சொந்த மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரத்திற்கு மற்றும் அவர் மகன் கார்த்தி ப.சிதம்பரத்திற்கு ஆதரவில்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது.


Source - News J

Next Story
கதிர் தொகுப்பு
Trending News