புதுச்சேரி: தொற்று அதிகரிப்பு மற்றும் மக்கள் அலட்சியத்தால் ஊரடங்கு குறித்து தமிழிசை சௌந்தர ராஜன் எச்சரிக்கை!
By : Janani
புதுச்சேரியில் மக்கள் தொடர்ந்து வழிமுறைகளைப் பின்பற்றாமல் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருப்பதாலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாகப் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் வருத்தம் தெரிவித்தார். இதனால் புதுச்சேரியில் சில இடங்களில் ஊரடங்கு விதிக்க நேரடியும் என்றும் எச்சரித்துள்ளார்.
"அநேக பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டால், தொற்று எண்ணிக்கை குறைய வாய்ப்புண்டு. எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தொற்று எண்ணிக்கை அதிகமா உள்ள இடங்களில் ஊரடங்கு விதிக்க பலர் ஆலோசனை அளிக்கின்றனர். ஏற்கனவே மகாராஷ்டிரா மற்றும் டெல்லி போன்ற இடங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மக்களின் கடினங்களைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு விதிக்க எண்ணவில்லை. ஆனால் மக்கள் முகக்கவசம் அணியாமல் தொற்றைப் பரப்பி வந்தால் ஊரடங்கு விதிக்க நேரிடும். தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்," என்று வெள்ளிக்கிழமை தடுப்பூசி தொடக்க நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார்.
மேலும், "தொடர்ந்து கொரோனா எதிர்த்துப் போராடிவருகிறோம் மற்றும் அது குறித்த பிரச்சனைகளைத் தீர்க்க ஆலோசனைக் கூட்டமும் தினமும் நடைபெறுகிறது. காரைக்கால், மஹே மற்றும் யாணம் தொகுதியில் அதிகாரிகள் சிறப்பாகச் செயல்படுகின்றனர். தடுப்பூசி பிரச்சாரத்திற்கு மக்களின் வரவேற்பு அதிகளவில் உள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.
தடுப்பூசி பற்றாக்குறை குறித்து அச்சம் தெரிவித்த அவர், "புதுச்சேரிக்கு ஏற்கனவே தேவையான அளவுக்கு மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கியுள்ளது, அதனால் பற்றாக்குறை எதுவும் இல்லை. தடுப்பூசி பிரச்சாரத்தின் போது மட்டும் 53,000 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இது மிகப்பெரிய எண்ணிக்கை, இதற்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்," என்று கூறினார்.
மேலும் வெளிநாடுகளுக்கு ஏன் தடுப்பூசி அனுப்பப்படுகின்றது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, உலக சுகாதார அமைப்பு, இந்தியாவிற்குத் தடுப்பூசி வழங்கிய தொழில்நுட்ப நிறுவனங்களிடம் தங்களுக்கு சில எண்ணிக்கையில் தடுப்பூசி வழங்கக் கோரியுள்ளது என்று தமிழிசை சௌந்தர ராஜன் பதிலளித்தார்.
source: https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/apr/17/puducherry-l-g-tamilisai-warns-of-partial-lockdown-amid-covid-surge-2290936.html